நகைகள் திருட்டு புகார்..! மறுநாளே பார்த்திபன் செய்த சம்பவம்..! என்ன நடக்குது..?

நடிகர் பார்த்திபன் நடிப்பதில் மட்டுமில்லாமல் படங்களை இயக்குவது படங்களை தயாரிப்பது என தன்னை அடுத்தடுத்த பரிமாணங்களை ரசிகர்களுக்கு காட்டியவர்.

தற்போதும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார். நீண்ட காலமாக சினிமாவுடன் பயணித்து வரக்கூடிய வெகுசில பிரபலங்களில் நடிகர் பார்த்திபனும் ஒருவர்.

இவருடைய படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன்னுடைய எதுகை மோனை பேச்சுகளால் பல்வேறு தரப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பார்த்திபன்.

அடுத்தடுத்து வித்தியாசமான படங்களையும் கொடுத்து வருகிறார். இவருடைய படங்கள் வெற்றி பெறுகிறதோ..? தோல்வி அடைகிறதோ..? அதெல்லாம் இரண்டாவது விஷயம்.

அவர் தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். படம் வசூல்.. வெற்றி.. தோல்வி.. இதெல்லாம் அவருக்கு இரண்டாவது விஷயம் தான்.

தன்னுடைய கற்பனையை.. தன்னுடைய சிந்தனையை.. எப்படி வித்தியாசமாக ரசிகர்களின் காரணங்களுக்கு கடத்துவது என்பதில் நடிகர் பார்த்திபன் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

சமீபத்தில், இவருடைய இயக்கத்தில் வெளியான டீன்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் கலையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக்களங்களில் அடுத்தடுத்த படங்களை பார்த்திபன் இயக்கி வருகிறார்.

இவர் சென்னை நந்தனத்தில் வசித்து வருகிறார் இவருடைய வீட்டிலேயே இவருடைய அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இதனுடைய அலுவலகம் கீழ் தளத்திலும் இவருடைய வீடு மேல் தரத்திலும் என இரண்டாவது பிரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், நேற்று தன்னுடைய அலுவலக 12 சவரன் தங்க நகை மாயமானதாகவும், தன்னுடைய உதவியாளர் கிருஷ்ணா காந்தி என்பவர் மீது தான் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு சென்னை நந்தனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் நடிகர் பார்த்திபன்.

இந்நிலையில், இன்றைய தினம் அந்த நகைகளை கிருஷ்ணகாந்த் திருப்பி கொடுத்து விட்டதால் புகாரை வாபஸ் வாங்கி கொள்வதாக பார்த்திபன் காவல் நிலையத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இவரது இந்த திடீர் ட்விஸ்ட் காவலர்களை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தன்னுடைய படங்களில் வித்தியாசமான கதைகளத்தால் கவனத்தை பெறும் நடிகர் பார்த்திபன் தற்போது தன்னுடைய நகைகள் காணாமல் போன சம்பவம் குறித்து புகார் தெரிவித்ததும் அதனை அடுத்த நாளே புகாரை திரும்பப் பெற்றதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பும் அதை பார்த்திபன் தன்னுடைய வீட்டிலிருந்து நகைகள் திருடு போனது என புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Actor Parthiban lodged a complaint with the police regarding the theft of his jewelry. However, he later withdrew the complaint after the jewelry was returned by the thief.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version