நான் திரும்பி வருவேன் சேது..! பிக்பாஸ்..! வெளியேறும் விஜய் சேதுபதி..?

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் கடந்த சில சீசன்களாக அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் சரி கிடையாது.

போட்டியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவது கிடையாது. குறிப்பிட்ட போட்டியாளர்களுக்கு ஆதரவாகவும் சில போட்டியாளர்களுக்கு எதிராகவும் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார் என்ற கருத்துக்கள் பரவின.

இதனை தொடர்ந்து கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடாது என்ற குரல்களும் எழுந்தன.

இந்நிலையில், தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருப்பதன் காரணமாக பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என நடிகர் கமலஹாசன் விலகிவிட அந்த பொறுப்புக்கு நடிகர் விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டார்.

விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி கையாள போகிறார்..? என்ற சந்தேகத்தை ஆரம்பம் முதலே பலரும் எழுப்பி வந்தனர். ஆனால், முதல் நான்கு வாரங்கள் நடிகர் விஜய் சேதுபதியின் அதிரடியான நடவடிக்கைகள் ரசிகர்களை கவர்ந்தன.

ஆனால், கடந்த சில எபிசோடுகளாக நடிகர் விஜய் சேதுபதி சரியாக தொகுத்து வழங்குவது கிடையாது. இவரும் ஒரு சில போட்டியாளர்களுக்கு ஆதரவாகவும் ஒரு சில போட்டியாளர்களுக்கு எதிராகவும் நடந்து கொள்கிறார். பாரபட்சத்துடன் இவர் நடந்து கொள்கிறார் என்பதை பார்க்க முடிகிறது.

இதற்கு கமலஹாசனை எவ்வளவோ பரவாயில்லை என்ற விமர்சனத்தை வைக்க தொடங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள். மேலும், அடுத்த சீசனில் நடிகர் கமலஹாசனை மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

அது சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் டீமை மொத்தமாக மாற்றி இருக்கிறது பிக் பாஸ் குழு என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க அடுத்த சீசன் வரையல்லாம் பொறுத்து இருக்க முடியாது.

இந்த சீசனிலேயே விஜய் சேதுபதியை மாற்றி விட்டு கமல்ஹாசனை தொகுப்பாளராக நியமியுங்கள் என்று குரல்கள் எழுந்து வருகின்றன. மேலும் கமலஹாசன் இது குறித்து தன்னுடைய நிலையை வெளியிட வேண்டும் என்ற கருத்துக்களும் பேச்சும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

Summary in English : It looks like fans of Bigg Boss Season 8 are making some serious noise about wanting a change in the hosting department! Many viewers have taken to social media to express their desire for Kamal Haasan to step in and replace Vijay Sethupathi as the host. While Vijay has his own unique style, it seems that the charm and charisma of Kamal Haasan is hard to resist for many fans.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version