கலியுக தெய்வம் ஐயப்பனை கொச்சைபடுத்திய  பிரபலங்கள்.. குவியும் புகார்கள்..

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தில் நடத்தப்பட்ட விழாவில் இந்து மத கடவுளை இழிவுபடுத்தக் கூடிய வகையில் பிக் பாஸ் பிரபலம் இசைவாணி பாடிய பாடலால் புகார்கள் குவிவது குறித்த பதிவு. 

கானா பாடகி இசைவாணி ஐ அம் சாரி ஐயப்ப உள்ள வந்தா தப்பா என்று ஐயப்பனை கொச்சைப்படுத்தக்கூடிய வகையில் பாடல் ஒன்றை பாட அந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக  இணையதளவாசிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் இந்து மக்களின் மனதை புண்படுத்தக்கூடிய வகையில் இந்த பாடல் வரிகள் இருப்பதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பல எழுந்துள்ளது. 

கலியுக தெய்வம் ஐயப்பனை கொச்சைபடுத்திய  பிரபலங்கள்..

ஏற்கனவே தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை கருத்தை தெரிவித்த நடிகை கஸ்தூரியை கைது செய்த தமிழக அரசு ஐயப்பனை பக்தியோடு விரதம் இருந்து வரும் பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் செயல்பட்ட இசைவாணியை கைது செய்யுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். 

இதனைத் தொடர்ந்து கானா இசைவாணி மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து கடவுளையும் வழிபாடு முறைகளையும் கேவலப்படுத்தியதாக சொல்லி இருக்கிறார்கள். 

அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்களின் சங்கத்தினர் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ஐயப்ப பக்தர்கள் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களும் இதற்கான கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வண்ணம் இருக்கிறார்கள். 

எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு இந்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

குவியும் புகார்கள்..

கார்த்திகை மாதம் கடுமையான விரதம் இருந்து ஐயப்பனை மனதையும் உடலையும் தூய்மையாய் வைத்துக் கொண்டு இரண்டு மாதங்கள் கடுமையாக விரதம் இருந்து சபரிமலை செல்லும் லட்சக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தக்கூடிய வகையில் இவர்களது செயல் அமைந்துவிட்டது.

எனவே தமிழக அரசு கஸ்தூரியை கைது செய்வதில் காட்டிய வேகத்தை இந்த விஷயத்தில் காட்டுமா இல்லை சோடை போகுமா? என்பதை இனிவரும் நாட்களில் தெரியவரும் அதுவரை காத்திருப்போம். 

Summary in English: Isaivani, a standout contestant from Bigg Boss Season 5, recently found herself in a bit of hot water over her rendition of the popular Ayyappan Gana song. Fans were buzzing with excitement when she decided to put her own spin on this traditional tune, but not everyone was thrilled with her interpretation. Some critics argued that her version strayed too far from the original vibes, leading to some heated discussions online.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version