ஜீவனாம்சம் மட்டும் இத்தனை கோடியா..? தலை சுத்துதுடா சாமி..!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மனைவி சாய்ரா பானு அவர்களை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில் இது குறித்து பல்வேறு விவாதங்கள் இணைய பக்கங்களில் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக திருமணம் செய்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நிறைவடையக்கூடிய இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

பல்வேறு தருணங்களில் தன்னுடைய மனைவியுடன் தன்னுடைய காதலையும் அன்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள்.. பேட்டிகள்.. பொது நிகழ்ச்சிகள் என பல்வேறு இடங்களில் தன்னுடைய மனைவியின் அன்பு, பாசம், காதல் ஆகிவற்றை பற்றி பேசியிருக்கும் ஏ ஆர் ரகுமான் தற்போது திடீரென தன்னுடைய மனைவியை பிரிவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

அதேபோல, ஏ ஆர் ரகுமான் அவர்களுடைய மனைவி சாய்ரா பானுவும் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை தன்னுடைய வழக்கறிஞர் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய மனைவிக்கு ஏ ஆர் ரகுமான் கொடுக்கக்கூடிய ஜீவனாம்சம் பற்றிய தகவல்கள் வெளியாகி பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அதன்படி 2023-2024 ஆம் நிதியாண்டில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் நிகர சொத்து மதிப்பு 280 மில்லியன் டாலர்களை தாண்டும் என தகவல்கள் வெளியாகின.

அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 2,380 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உடையவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

இந்நிலையில் தன்னுடைய மனைவியை பிரியும் நிலையில் ஏ ஆர் ரகுமான் அவருக்காக எவ்வளவு தொகை ஜீவனாம்சமாக கொடுக்கப் போகிறார்..? இவரின் சொத்து மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு என்றால் கூட 500 கோடி ரூபாய் தாண்டுகிறதே.. தலை சுத்துதுடா சாமி.. என்று இணைய பக்கங்களில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Summary in English : In the latest buzz around Cine industry, it seems that music maestro A.R. Rahman is set to shell out a whopping amount as maintenance for his soon-to-be ex-wife, Saira Banu, following their divorce.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version