யாரைப் பார்த்து பேசுற.. உன் பொண்டாட்டிய அப்படிச் சொன்னா ஒத்துக்குவியா? காண்டான பாலா..

சிறுத்தை சிவாவின் சகோதரர் நடிகர் பாலா கோகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதை குறித்து பத்திரிகைகளில் வேண்டாத வகையில் செய்தி பரப்பியதை அடுத்து கடுப்பாகி போன பாலா என் மனைவியை பேச நீங்கள் யார்? உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற தொனியில் instagram-ல் பத்திரிக்கையாளர்களை விளாசிய விபரம். 

மலையாள நடிகரான பாலா தமிழில் அன்பு, அப்பா அம்மா செல்லம், வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து பின் கருத்து வேற்றுமையால் பிரிந்துவிட்டார். 

இதைத்தொடர்ந்து டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிறகும் அவர்கள் இடையே சமூக உறவு இல்லாத காரணத்தால் அவரையும் விட்டு பிரிந்த பாலா தற்போது மூன்றாவதாக உறவுக்கார பெண் கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

யாரைப் பார்த்து பேசுற..

தமிழ் திரை உலகில் தனக்கு என்ற ஒரு நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் சில படங்களில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த சிறுத்தை சிவாவின் தம்பி பாலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

அண்மையில் இவர் கோகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல்வேறு விதமான கருத்து விமர்சனங்கள் இணையும் முழுவதும் எழுந்தது. 

இதை அடுத்து தற்போது நடிகர் பாலா தன் மனைவியை வேலைக்காரி என்றும் வேலைக்காரியின் மகள் என்றும் எழுதியிருக்கின்ற மீடியாவை கிழித்ததோடு மட்டுமல்லாமல் இது தான் மீடியாவின் தர்மமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் என் மனைவியை வேலைக்காரி என்று சொல்ல யார் அவர்களுக்கு உரிமை கொடுத்தது என்ற குரல் விட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் நீங்கள் என் மனைவி குறித்து பேசும் போது நான் உங்கள் மனைவியை பேசட்டுமா? என்று கேட்டிருக்கிறார். 

மேலும் எழுதும் போது சினிமாவைப் பற்றி எழுதுங்கள். என் நடிப்பு குறித்து பேசுங்கள் எதற்காக என் மனைவி குறித்து பேசுகிறீர்கள் இதற்கு யார் தைரியம் கொடுத்தது அல்லது யார் உரிமை கொடுத்தது என்று சரமாரியாக கேள்விக்கணைகளை கொடுத்து இருக்கிறார். 

உன் பொண்டாட்டிய அப்படிச் சொன்னா ஒத்துக்குவியா?

இதை அடுத்து என் மனைவி கோகிலாவின் தந்தை பிரபலமான அரசியல் பிரமுகர் இது குறித்து நான் போலீசில் புகார் கொடுக்கச் சென்றேன், ஆனால் அவர் என்னை தடுத்து விட்டு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். இனி என் மனைவியைப் பற்றி யாரும் தவறாக பேசக்கூடாது என்ற எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார் நடிகர் பாலா.

ஏதோ ஒரு பத்திரிக்கையில் தவறான செய்தி வந்துவிட்டால் அதை சற்றும் கவனிக்காமல் அதே செய்தியை தொடர்ந்து எழுதுவதால் என்ன லாபம் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பது இங்கு யாருக்கோ பிடிக்கவில்லை என்பது போலத்தான் இவர்கள் செய்தியை பரப்பி வருகிறார்கள்.

 இந்த செய்தியை தவறாக பரப்பிய அந்த நபர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்கும் வரை நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அந்த வீடியோவில் பாலா பேசி இருக்கும் பேச்சு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Summary in English: Recently, Malayalam actor Bala took to Instagram to share an emotional video that really tugged at the heartstrings of his fans. In the clip, he opened up about his personal experiences and the challenges he’s faced in his life and career. It was a raw and honest moment that resonated with many, showing a side of him that we don’t always get to see on screen.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version