நெப்போலியன் மொத்த சொத்தையும் 2வது மகன் அழிச்சிடுவார்.. போட்டு உடைத்த பிரபலம்..! வில்லங்கமான திருமண ஆசை..!

நெப்போலியன் இரண்டாவது மகன் தன்னுடைய திருமணம் எங்கே நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார் இதனை கேட்ட ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர். 

நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷிற்கு ஜப்பானில் கோலாகலமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து ஹல்தி சங்கீத் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் திருமணம் தடைபடலாக நடக்க இருக்கிறது. நிலையில் நெப்போலியன் இரண்டாவது மகன் குணால் தன்னுடைய திருமணம் எங்கே..? எப்படி..? நடக்க வேண்டும் என்பதை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

இந்த விவகாரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் ஹீரோ கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர்.

இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அரசியல்வாதியாகவும் இருந்து பல்வேறு பதவிகளை வகித்த இவர் ஒரு கட்டத்தில் ஆளை விடுங்கடா சாமி என்று அமெரிக்காவுக்கு சென்ற செட்டில் ஆகிவிட்டார்.

இவை அனைத்தையும் தன்னுடைய மகன் தனுசுக்காக உதறிவிட்டு சென்றார் என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு என்ற விசித்திரமான நோய் பாதித்திருக்கக்கூடிய நிலையில் இவருக்கு திருமணமே நடக்காது அப்படி திருமணம் நடந்தாலும் இவரால் வழக்கம் போல இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது கடினம் என கூறப்பட்டது.

ஆனாலும் தன்னுடைய மகனுக்காக ஒரு பெண்ணை தேடிப் பிடித்து அக்ஷயா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். அந்த பெண்ணும் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இவர்களுடைய திருமண செய்தி வெளியான போதே இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன. பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்குவதா..? இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என தெரிந்தும் அந்த பெண் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கிறாரா..? என்று பல்வேறு விமர்சனங்கள் வெளிப்படையாகவே சமூக ஊடகங்களில் பலரால் வைக்கப்பட்டது.

ஆனால், அதை எல்லாம் புறம் தள்ளி விட்டு தற்போது நெப்போலியன் மூத்த மகன் அவர்களின் திருமண விழா களைகட்டியிருக்கிறது. நடிகர் சரத்குமார், நடிகைகள் மீனா, ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட பல்வேறு தமிழ் சினிமா பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஜப்பானுக்கு சென்று இருக்கிறார்கள்.

திருமண நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை கலா மாஸ்டர் ஏற்றிருக்கிறார். நடிகர் நெப்போலியன் அனைத்து ஏற்பாடுகளையும் தனது மகனுக்காக ஓடி ஓடி செய்து கொண்டிருக்கிறார்.

ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் இருக்கின்றனர். இரண்டாவது மகனுடைய திருமண ஆசை பற்றி சமீபத்தில் தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, அண்ணன் தனுஷுக்கு திருமணமாக உள்ளது அடுத்ததாக தம்பி குணாலுக்கு எங்கே திருமணம் செய்து கொள்ள வேண்டும்..? எப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும்..? என கலா மாஸ்டர் கேட்க கொஞ்சம் கூட யோசிக்காமல் நிலவில் திருமணம் நடத்தலாம் என யோசித்து வைத்திருக்கிறேன் என பகீர் கிளப்புகிறார்.

நிலவுக்கு உன்னால் செல்ல முடியுமா..? என கலா மாஸ்டர் கேட்க அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் நிச்சயமாக நிலவுக்கு சென்று வர முடியும் என்று கூறுகிறார் குணால்.

நெப்போலியன் சொத்தையே அழிச்சிடுவான் போல இருக்கே.. நிலவுல திருமணத்தை நடத்த வேண்டும் என குணால் சொன்னதை கேட்டு மாஸ்டர் அதை அப்படியே ஓப்பனாக சொல்லிவிட்டார்.

மூத்த மகன் தனுஷ் திருமணத்திற்கே பல நூறு கோடிகளை நெப்போலியன் செலவு செய்து கொண்டிருக்க.. இரண்டாவது மகனும் பணத்தின் அருமையே தெரியாமல் செல்வ செழிப்புடன் இருப்பதால் தான் இப்படி ஜப்பானிலும் நிலாவிலும் திருமணம் நடக்க ஆசைப்படுகிறார்கள் என்று கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

இது குறித்து உங்களுடைய கமெண்ட் என்ன என்பதை பதிவு செய்யலாம். 

Summary in English : Actor Nepoleon Son Gunal has captured the attention of audiences. He expressed a whimsical desire to hold his wedding on the Moon.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version