40 வருஷ ரகசியத்தை உடைத்த நெப்போலியன்.. என் பையன பத்தி எனக்கு.. ஜப்பானில் Napoleon கண்ணீர்..!

நடிகர் நெப்போலியன் அவர்களின் மூத்த மகன் தனுஷ் திருமணம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. பலரும் இது குறித்து எதிர்மறையான விவாதத்தை செய்து வருகிறார்கள். அ

தில் முக்கியமாக மருத்துவர் ஒருவர் நடிகர் நெப்போலியன் இந்த செயலை கடுமையாக விமர்சித்து கருத்தை வெளியிட்டு இருந்தார். இது குறித்து நடிகர் நெப்போலியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல ஆண்டுகால ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது, என்னுடைய மகன் திருமணம் குறித்து மிகவும் கொச்சையாக மோசமாக ஒரு மருத்துவர் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் வயதில் மூத்தவர். பொதுவாக நான் செய்த உதவிகளை வெளியே சொல்ல மாட்டேன்.

நிறைய உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். நான் செய்யக்கூடிய உதவிகள் அதிகபட்சம் எனக்கும் என்னுடைய மனைவிக்கு மட்டுமே தெரியும்.

ஆனால், தற்போது அந்த விஷயத்தை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். “என் உயிர் தோழன்” பாபு என ஒரு நடிகர் இருந்தார். உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அவர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமடைந்த அதன் பிறகு தவறான சிகிச்சை முறைகளால் மோசமான உடல்நிலைக்கு சென்று விட்டார். எழுந்து நடக்க முடியாத அளவுக்கு அவருடைய உடல்நிலை மாறிவிட்டது.

அதன் பிறகு அவரைப் பற்றிய என்னிடம் தொடர்பு கொண்டு எனக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டார்கள். அதன் பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மாத மாதம் அவருக்கு பணம் அனுப்பி உதவி செய்தேன்.

அந்த நடிகர் என் உயிர் தோழன் பாபு யார் என்றால் என்னுடைய மகனை பற்றி கொச்சையாக பேசிக் கொண்டிருக்க கூடிய அந்த மருத்துவரின் உறவினர்தான்.

தன்னுடைய உறவினர் ஒருவர் இப்படி மோசமான சூழ்நிலையில் இருக்கிறார் அவருடைய உடல் நலனில் அக்கறை செலுத்தாத நீங்கள்.. அவர் அவரைப் பற்றி கவலைப்படாத நீங்கள்.. இன்று என்னுடைய மகனைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்..? வேதனைப்படுகிறார்கள்..?

அந்த மருத்துவருக்கும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது இதை தான். உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நான் பல ஆண்டுகளாக உதவி செய்திருக்கிறேன். அதனை சொல்லி காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நீங்கள் என்னை கொண்டு வந்து விட்டீர்கள்.

என்னுடைய பையனைப் பற்றி எனக்கு தெரியும். எங்கேயோ உக்காந்துகிட்டு இருக்கும் உங்களுக்கு என்ன தெரியும் என பேசியுள்ளார்.

அவருடைய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : In a surprising turn of events, actor Nepoleon has taken a bold stand against renowned doctor and public figure youtube fame doctor, who recently criticized his son’s marriage in a public forum. Nepoleon’s passionate response highlights not only the importance of family support but also the need for respect when discussing personal matters.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version