ரஞ்சித் மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு.. சொந்தக்காரங்களே சொன்ன வார்த்தை.. மனைவி செய்த அந்த செயல்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் நடிகர் ரஞ்சித் தன்னுடைய மகனுக்கு இருந்த ஆட்டிசம் குறைபாடு பற்றியும் ஆனால் தங்களுடைய உறவினர்கள் செய்த மோசமான நடவடிக்கைகள் பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

அதற்கு பிறகு அவருடைய மனைவியான பிரியா ராமன் தன்னுடைய குழந்தை குறித்து சில தகவல்களை தேடி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்கின் போது நடிகர் ரஞ்சித் அவருடைய கதையை சொன்னார்.

அப்போது தன்னுடைய மகன் குறித்து அவர் பேசியதாவது தன்னுடைய மூத்த மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்பட்டது. இதனால், உறவினர்கள் அதிகமாக எங்களை அவமானப்படுத்தினார்கள்.

அதையெல்லாம் தாண்டி நாங்கள் என்னுடைய மகனை சந்தோஷமாக வளர்த்து மகிழ்ந்தோம் ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது கடினமான காரியம் அதேசமயம் ஆட்டிசம் போன்ற ஒரு குறைபாடு இருக்கக்கூடிய குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.

என்னுடைய மனைவி பிரியா ராமன் தான் குழந்தைகளை மிகவும் கவனமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதுபோல என்னுடைய இரண்டாவது மகனின் இடம் நான் எனக்கு பிறகு நீ தான் அண்ணனை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.

அதற்கு அவனும் அவனுடைய பொறுப்பை உணர்ந்து நான் இருக்கிறேன் அப்பா என்னுடைய அண்ணனை நான் பார்த்துக் கொள்வேன் என சொன்னான். அன்று அவன் சொன்னது போலத்தான் இப்போது வரைக்கும் தன்னுடைய அண்ணனை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்கிறான் என கண் கலங்கி பேசியிருக்கிறார் நடிகர் ரஞ்சித்.

இந்நிலையில், இது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்தார் ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் அவர் கூறியதாவது என்னுடைய கணவர் ரஞ்சித் சொன்ன கதை தான் எங்களுடைய உண்மையான வாழ்க்கை எங்களுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு விஷயம் எங்களை பல நாட்கள் தூங்க விடாமல் செய்திருக்கிறது.

நம்முடைய வாழ்க்கை கதையை சொல்லவே முடியாது. அப்படி சொல்லும் போது அவர் மீதுள்ள பார்வை மாறுபடுகிறது. எப்படி படம் எடுத்து நாங்கள் தோற்றோம் என்ற கதையையும் சொன்னார். விழுந்து எழுந்து.. விழுந்து எழுந்து.. என பல்வேறு பிரச்சனைகளை நாங்கள் ஜோடியாக எதிர்கொண்டோம்.

அதோடு எங்களுடைய மூத்த மகன் ஆதித்யாவிற்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதை நாங்கள் ஒரு பெரிய பிரச்சினையாக பார்க்கவில்லை. அவனை சாதாரணமான ஒரு மனிதன் போலவே பாவிக்க தொடங்கினோம்.

அப்படி ஆட்டிசம் என்று சொன்னபோது என்னுடைய நண்பர்கள் எல்லோரும் நீ என்ன தப்பு பண்ணேன்னு உனக்கு இப்படி தண்டனை கிடைத்ததற்கு என ஆறுதலா பேசுவது போல என்னை நோகடிப்பார்கள்.

அதைக் கேட்டு பல நாட்கள் நான் வருத்தப்பட்டு இருக்கிறேன்.. அழுது இருக்கிறேன்.. பிறகு இதுதான் நம்முடைய வாழ்க்கை என உணர ஆரம்பித்த பிறகு தான் எனக்கு விஷயமே புரிந்தது.

எனக்கு கடவுள் என்னை நம்பி என்கிட்ட அந்த குழந்தையை கொடுத்து இருக்கிறார். என்மேல் கடவுளுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தால் எனக்கு இப்படி ஒரு குழந்தையை கொடுத்திருப்பார் என தோனியது.

உறவினர்கள் பார்க்கும் போதெல்லாம் நீ எவ்வளவு துறுத்துருன்னு பேசுவ உன் குழந்தைக்கு இப்படி ஆயிடுச்சு என்று சொல்லுவார்கள். அவர்கள் என்ன நினைத்து சொல்கிறார்கள் என தெரியவில்லை.

ஆனால், அவர்கள் சொல்லும் போதெல்லாம் என் மனம் கஷ்டப்படும். இதற்கெல்லாம், பதில் ஒன்றே ஒன்று தான். இப்போ, கடவுள் உன்கிட்ட ஒரு மண்பானையை கொடுத்து பிடித்த வண்ணத்தை பூசிக்கொள் என்று கூறுகிறார்.

ஆனால் எனக்கு களிமண்ணை கொடுத்து நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ எனக்கு கொடுத்திருக்கிறார். இதுதான் எனக்கு கிடைத்த பெரிய பொறுப்பு என பேசி இருக்கிறார் பிரியா ராமன். இவருடைய இந்த பக்குவப்பட்ட பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

Summary in English : In a heartfelt moment on Bigg Boss, actor Ranjith opened up about her first son’s battle with autism. It was a powerful revelation that resonated with many viewers. Ranjith shared her personal journey, shedding light on the challenges and triumphs of raising a child with autism.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version