சூப்பர் ஸ்டாருக்கும் சத்யராஜூக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை..! பலரும் அறியாத ரகசியம்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சத்தியராஜ்-க்கும் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த்துக்கும் இடையே அப்படி என்ன தான் பிரச்சனை உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த பதிவை கட்டாயம் படிக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் வில்லனாக நடித்து வந்த சத்யராஜ் பின்னாடி ஹீரோவாக மாறி தனது அற்புத நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டாருக்கும் சத்யராஜூக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை..

இந்நிலையில் ரஜினியை கண்டால் சத்தியராஜுக்கு பிடிக்கவில்லை என்று பலர் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்சனை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

கோவையைச் சேர்ந்த சத்தியராஜ் என்றாலே குசும்புக்கு குறைவில்லை என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும், அப்படி குசும்புக்கு பெயர் போன சத்தியராஜிடமே ரஜினிகாந்த் தன்னுடைய மிகப்பெரிய குசும்பை காட்டியதை அடுத்த தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

சத்யராஜ் பணம் காசு இல்லாத பராரி கிடையாது. இவர் மிக நல்ல செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்ததோடு மட்டுமல்லாமல் பணம் படைத்த செல்வந்தராகவும் இருந்திருக்கிறார். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக சென்னைக்கு வந்தவர் வாய்ப்பை தேடும் போதே விலை உயர்ந்த பைக்கில் சென்று தான் தேடி இருக்கிறார்.

மேலும் மற்ற நடிகர்களைப் போல பசி, பட்டணி என்று வாடாமல் ஒரு மிகப்பெரிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து சினிமா வாய்ப்பை தேடியவர். அது:மட்டுமல்லாமல் அன்று விலை உயர்ந்த பைக்காக கருதப்படும் ஜாவா பைக்கில் செல்லுவார்.

அப்படி இருந்த சத்தியராஜ் ரஜினிகாந்த் ஒரு இணைந்து மிஸ்டர் பாரத் என்ற படத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் தம்பிக்கு எந்த ஊரு என்ற ஷூட்டிங்கில் நடந்த விஷயம் தான் இவர்களுக்குள் மன சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.

பலரும் அறியாத ரகசியம்..

தம்பிக்கு எந்த ஊரு சூட்டிங் சமயத்தில் நடிகை மாதவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் யார் இந்த சத்தியராஜ் என்ற விவரத்தை கேட்டிருக்கிறார். இதை அடுத்து ரஜினிகாந்த் மிகவும் நக்கலுடன் அவர் அமெரிக்காவில் ஒரு யுனிவர்சிட்டியில் ப்ரொபஷனாக இருந்தவர் என்று கூறி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து விடுமுறை நாட்களில் இங்கு வந்து திரைப்படங்களில் நடித்துக் கொடுத்துவிட்டு செல்லுவார் என்று சொல்லி இருக்கிறார். ரஜினியிடம் இதைக் கேட்டு உண்மை என்று நம்பிய நடிகை மாதவி அதை அப்படியே சத்யராஜிடம் கேட்டிருக்கிறார்.

இப்படி நடிகை மாதவி சத்யராஜிடம் கேட்கவே அவருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. இதனை அடுத்து ரஜினிகாந்திடம் நேரடியாகவே இந்த மாதிரி எல்லாம் நக்கலும் கிண்டலும் பண்ண வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படம் வெளி வந்த பிறகு சத்யராஜ் நடித்திருந்த பாதி காட்சிகளை காணவில்லை.

இதற்கு காரணம் ரஜினிகாந்த் என்ற எண்ணம் சத்யராஜின் மனதில் வேறு ஒன்றியதோடு மட்டுமல்லாமல் தான் நடித்த சீன்களில் பெரும்பாலான சீன்கள் வராததை அடுத்து ரஜினி மீது ஒரு வன்மம் ஏற்பட்டது. இந்த வன்மத்தை காவிரி நீர் பங்கிட்டு பிரச்சனை வரை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் அந்த நீர் பிரச்சனையில் ரஜினி முன்னிலையில் தமிழனாய் சிலிர்த்து சில வார்த்தைகளை வீசி இருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இருவரும் இணைந்து இருவரை நடிக்கவே இல்லை.

இந்நிலையில் ஏறக்குறைய 40 வருடங்கள் கழிந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் ஒன்றாக நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் சத்யராஜுக்கும் இருக்கின்ற பிரச்சனை இதுதானா அட.. இதுதான் அந்த பரம ரகசியமா? என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

  1. முகேஷ்
    Oct 29, 2024
    அதற்கு பிறகு மிஸ்டர் பாரத் 1986ல் வெளியானதே
Exit mobile version