யாரு வாழ்வு யாரு கையில.. நடிகர் சூரி லைன் அப்பில் அடுத்தடுத்து படங்கள்..

தமிழ் திரை உலகில் காமெடியனாக அறிமுகமான நடிகர் சூரி தற்போது ஹீரோவாக களம் இறங்கியதை அடுத்து அடுத்தடுத்து திரைப்படங்கள் அவருக்கு அமைந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடியன்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். 

கொட்டு பட்டாலும் மோதிர விரலால் கொட்டுப்பட வேண்டும் என்ற சொல்லுக்கு ஏற்ப வெற்றிமாறனின் படத்தில் ஹீரோவாக மாறிய நடிகர் சூரிக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் என்று சொல்லக்கூடிய வகையில் பல பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கிறது. 

யாரு வாழ்வு யாரு கையில..

அந்த வகையில் கருடன், கொட்டு காளி படங்களில் நடித்த நிலையில் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்ற பின் தற்போது விடுதலை ரெண்டு படத்திலும் சூரி நடித்திருக்கிறார் எந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது. 

மேலும் காமெடியில் ஒரு பக்கம் கலக்கி வரும் இவர் கதாநாயகனாக இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளது அந்த வகையில் விமலின் விலங்கு என்ற வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜன் சூரியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். 

இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இருக்கிறார். மேலும் எல்ரெட் குமாரின் அடுத்த தயாரிப்பிலும் நடிகர் சூரி நடிக்க உள்ளார். 

நடிகர் சூரி லைன் அப்பில் அடுத்தடுத்து படங்கள்..

இந்தப் படத்திற்கான கதையை வெற்றிமாறன் எழுதியுள்ள நிலையில் மதிமாறன் படத்தை இயக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. 

எனவே தற்போது நடிகர் சூரியின் காட்டில் அடை மழை என்று சொல்லக்கூடிய அளவு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கொட்டி வருகிறது. இதை புரிந்து கொண்ட ரசிகர்கள் யார் வாழ்வு யாரு கையில் என்ற சிலேடையை சொல்லி வருவதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள். 

Summary in English: Soori, the talented actor known for his comedic flair and unique style, has truly made a mark in the film industry. With a string of successful movies under his belt, it’s clear that he’s just getting started. Fans are always eager to see what he’ll do next, and with so many projects lined up, there’s plenty to look forward to!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version