அசுர வீழ்ச்சியை கண்ட சூர்யா? எப்ப இருந்து இது ஆரம்பிச்சது பாக்கலாமா..

நடிகர் சூர்யா தமிழில் முன்னணி நாடகராக வலம் வரக்கூடிய வேளையில் தொடர்ந்து அவரது படங்கள் மண்ணைக் கவ்வி வருவதோடு மட்டுமல்லாமல் வசூலை தராமல் பிளாப்பாகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இது எப்போது இருந்து ஆரம்பித்தது என்பது பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

வாரிசு நடிகரான நடிகர் சூர்யா ஆரம்ப காலத்தில் சில படங்களில் நடித்து சரியான ரிச்சை அடைய முடியாவிட்டாலும் பின்னாளில் அவர் நடித்த படங்கள் குறிப்பாக நந்தா முதல் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் நடித்ததை தொடர்ந்து இவருக்கு என்று ஒரு மார்க்கெட் ஆரம்பித்தது. 

இதைத்தொடர்ந்து கஜினி,சிங்கம் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. 

அசுர வீழ்ச்சியை கண்ட சூர்யா?

எனினும் தற்போது நடிகர் சூர்யாவின் படங்கள் ஒரு மிகப்பெரிய வெற்றியை தராத நிலையில் அண்மையில் வெளிவந்த கங்குவா திரைப்படம் இவரது திரைப்பட வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது என்று சொல்லலாம்.

இரண்டு ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் சூர்யா படம் வருகிறது என்று சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த படம் அவருக்கு கை கொடுக்காத நிலையில் அவர் அசுர வீழ்ச்சி அடைந்து விட்டதாக இணையங்களில் செய்திகள் பரவி வருகிறது. 

மேலும் சூர்யாவின் திரைப்பட வாழ்க்கை அவ்வளவு தான் என்று சொல்லி வரக்கூடிய பலரும் எப்போது இருந்து சூர்யா வீழ்ச்சி அடைந்த ஆரம்பித்தார் என்பதையும் பட்டியல் இட்டிருக்கிறார்கள். 

அந்த வகையில் சூர்யாவின் சரிவு 2014 வது ஆண்டிலிருந்து ஆரம்பித்து விட்டதாக சொல்லுகிறார்கள். இதற்குக் காரணம் இவர் நடிப்பில் வெளிவந்த அஞ்சான், தானா சேர்ந்த கூட்டம், மாஸ், என் ஜி கே, காப்பான், சிங்கம் 3 போன்ற படங்களை சொல்லலாம். 

இந்த வரிசையில் சிங்கம் 3 படம் ஓரளவு பாக்ஸ் ஆபிஸை கொண்டிருந்தாலும் ஏனைய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் கிட்டை நிச்சயமாக கொடுக்கவில்லை என்பது எதார்த்தமான உண்மை இது உங்களுக்கும் தெரிந்திருக்கும். 

இது ஒரு பக்கம் இருக்க தளபதி விஜயோ அதே சமயத்தில் துப்பாக்கி, தெறி, பைரவா, மெர்சல், சர்க்கார், பிகில் என நிறைய பிளாக் பஸ்டர் படங்கள் வெளி வந்தது. இந்த சமயத்தில் தான் சூர்யா தனது திரை உலக வாழ்க்கையில் சாருக்கல்களை ஆரம்பித்தார் என்று சொல்லலாம். 

எப்ப இருந்து இது ஆரம்பிச்சது பாக்கலாமா..

இந்த சரிவு பத்தாது என்று சொல்லக்கூடிய அளவு கோவிட் சமயத்தில் சூர்யாவிற்கு ஒரு மிகப்பெரிய அடியே ஏற்பட்டது என்று சொல்லலாம். இதற்குக் காரணம் கோவிட் சமயத்தில் ரிலீசான சூரறைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் திரையரங்குகளில் ஓடவில்லை. 

அப்படி அந்த இரண்டு படங்களும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தால் சூர்யாவிற்கு அது  ஒரு மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்து இருக்கும். எனினும் தூரதிஷ்டவசமாக இந்த இரண்டு படங்களுமே ஓடிடி தளத்தில் தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது வெளிவந்த கங்குவார் படமும் அவருக்கு கை கொடுக்காத நிலையில் இந்த தகவல்கள் சூர்யாவின் அசுர வீழ்ச்சியை உறுதி செய்யக்கூடிய வகையில் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 

இதை அடுத்து இனி வரும் படங்களில் ஆவது அவர் தந்த கொடுத்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வாரா இல்லை இவரது மார்க்கெட் முடிந்து விட்டதா? என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியவரும்.

Summary in English: Actor Surya has been a household name in the film industry for years, but lately, he’s faced a bit of a dip in the cinema market. It’s tough to see someone so talented navigating through these rough waters. Fans are left wondering: will he bounce back or is this the beginning of the end for his career?

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version