“இதை செஞ்சா.. உங்க ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்..” கீர்த்தி சுரேஷை மிரட்டிய சிம்பு பட நடிகை..!

In a recent turn of events that’s got fans buzzing, actress Kalyani Priyadharshan made a request to her fellow star Keerthy Suresh.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிந்து ஒரு வார காலம் ஆகிவிட்டது என்றாலும் அவருடைய கல்யாணத்தைப் பற்றி பரபரப்பும் சுவாரசியமும் குறைந்ததாக தெரியவில்லை.

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி காலத்திலிருந்து காதலித்து வரும் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களிடம் பெரும் போராட்டம் நடத்தி இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 12ஆம் தேதி திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை கல்யாணி பிரியதர்ஷின் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவருடைய கணவர் ஆண்டனி தட்டிலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில், அதை செய்தார் உங்க ரெண்டு போரையும் கொலை செய்து விடுவேன் என அவர் மிரட்டியிருப்பது ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

கோவாவில் இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெற்ற கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் தென்னிந்திய திரைப்பிரபலங்கள் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள் வரை பெரும் நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் மலையாள திரையுலகினர் பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது. தமிழ் திரை உலகில் இருந்தும் பலவேல நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் நடிகர் திரிஷா ஆகியோர் இணைந்து ஒரே விமானத்தில் பயணித்தது பரபரப்பை கிளப்பியது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இது குறித்து நடவடிக்கை தேவை என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். அந்த அளவுக்கு இந்த விவகாரம் பரபரப்பானது.

இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் ஹீரோயினாக நடித்த பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்தார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களது திருமணம் உங்களுடைய காதலைப் போல மிகவும் அழகாக இருந்தது. ஐ லவ் யூ.

நீங்கள் எதுவும் திருமணம் செய்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய திருமணத்தில் இருவருமே மிக அழகாக இருந்தீர்கள். உங்களுடைய திருமணத்தில் நான் அழும் புகைப்படங்களை நீங்கள் ரிலீஸ் செய்தால் உங்களை கொன்று விடுவேன் என பேரன்போடு பதிவிட்டு இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

இந்த வாழ்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Actress Kalyani asked Keerthy not to release any photos of her crying during her wedding. It’s such a relatable situation, right? Weddings can be super emotional, and sometimes those teary moments are just part of the rollercoaster ride of feelings.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version