உள்ளார பூந்து பாரு.. பாணா காத்தாடி ஐட்டம் நடிகை யாரு..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

நடிகர் அதர்வா நடிகை சமந்தா நடிப்பில் வெளியான பாணா காத்தாடி திரைப்படத்திலிருந்து பெற்ற உள்ளார பூந்து பாரு என்ற பாடலுக்கு தற்போதும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அதேபோல அந்த பாடலில் நடனம் ஆடி இருந்த நடிகை கைரா தத்திற்கும் ( Kyra Dutt ) தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இவருடைய உண்மையான பெயர் டெபி தத்தா ( Debi Dutta ) ஆகும் மேற்குவங்க மாநிலம் கல்கட்டாவில் பிறந்த இவர் மும்பையில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ராக்கெட் சிங் என்ற திரைப்படத்தில் அபர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அதன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் அம்மணி.

இவர் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தில் இடம்பெற்ற ஐட்டம் நம்பருக்கு நடனமாடி இருப்பார்.

தொடர்ந்து தமிழில் உதயன், மங்காத்தா, தடையறத் தாக்க, எப்படி மனசுக்குள் வந்தாய் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்ற “நாம அம்பானி பரம்பர” என்ற பாடலில் குத்தாட்டம் போட்டு ஒட்டு மொத்த திரையரங்கையும் குலுங்க வைத்தவர் நடிகை கைரா தத்.

ஹிந்தி, தெலுங்கு, பெங்காளி என பல்வேறு மொழி படங்களில் நடித்தும் நடனமாடியும் அசத்தியிருக்கிறார்.

மேலும் டி சீரிஸ் லேபிளில் பார்ட்டி அனிமல்ஸ் என்ற பாடலும் பாடியிருக்கிறார். இடையில் சோனம் முக்கார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பாணா காத்தாடி படத்தில் ஐட்டம் நம்பருக்கு ஆட்டம் போட்ட நடிகையா இது…? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Summary in English : Actress Kyra Dutt, also known as Debi Dutta, is making waves on social media with her recent pictures! If you remember her from the catchy “Baana Kaathadi” item song, you’ll be thrilled to see how she’s been capturing hearts all over again. Her latest snaps are getting tons of likes and comments, and it’s easy to see why!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version