“இதை அடக்கிக்கோ.. என் கையில படுது..” படப்பிடிப்பு தளத்தில் நளினியிடம் கூறிய பிரபல நடிகர்..!

தமிழ், மலையாள படங்களில் நடித்திருக்கும் நடிகை நளினி 1980-களில் மிகச் சிறந்த திரைப்பட கதாநாயகியாக திகழ்ந்தவர். இவர் தமிழில் பிரபலமான நடிகர்களாக திகழ்ந்த சத்யராஜ், மோகன் விஜயகாந்த் போன்ற பல நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்தவர்.


நடிகை நளினி ஆரம்பத்தில் ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் என்ற திரைப்படத்தில் சின்னதாக ஒரு கேரக்டர் ரோலை செய்தார். இந்த படம் இவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை.

“இதை அடக்கிக்கோ.. என் கையில படுது..”

ஓம்சக்தி, சமயபுரத்தாளே போன்ற சாமி படங்களில் நடித்த பிறகு இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை அடுத்து இவர் கதாநாயகியாக பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இவரது உருவத்தை பார்க்கும் போது பெரிய கண்களோடு, சுருள் சுருளான முடியும் எளிமையான சிரிப்பும் ரசிகர்களை கவர்ந்து உள்ளது என்று சொல்லலாம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் சில நூறு நாட்கள் கடந்து ஓடியது நினைவில் இருக்கலாம்.

இந்த நிலையில் நளினி அடுத்தடுத்து படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை அண்மை பேட்டி ஒன்றில் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அண்மைக் காலமாக சீரியல்களிலும் நடித்து வரக்கூடிய இவர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டு அவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களில் நடித்து வரும் நளினி தான் ஹீரோயினியாக நடித்த சமயத்தில் நடந்த விஷயத்தை தான் ஓபன் ஆக பேசி இருக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் நளினியிடம் கூறிய பிரபல நடிகர்..

அண்மை காலமாக படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து அதிகளவு பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் டி ராஜேந்திரனின் தன்மையை பகிர்ந்ததை அடுத்து அவரைப் போல் இதுவரை யாரும் திரையுலகில் இருக்க மாட்டார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக விளங்கிவிட்டது.

இதுவரை எந்த நடிகையும் தொட்டு நடிக்காத டி ராஜேந்திரனுடன் இணைந்து நடிக்கும் சமயத்தில் மூச்சுக்காற்று கூட தன் மேல் படக்கூடாது என்று சொல்லக்கூடியவர். இப்படிப்பட்ட நடிகரை திரை உலகில் காண்பது அரிது என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் தனது மூச்சுக்காற்று கையில் பட்ட போது இதை அடக்கி கொள் என் கையில் படுகிறது என்று நாசுக்காக கூறுகிறார். இந்த விஷயம் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை தற்போது வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version