சீதாவின் உண்மை முகம்.. அப்பாவே மகளை வழுக்கட்டாயமாக.. செருப்பை போட்டுவிட ஒருத்தர்..

நடிகை சீதா. இவருடைய உண்மையான பெயர் ஸ்வர்ண சைதன்யா என்பதாகும். இதனை சுருக்கி சீதா என்று பெயரை மாற்றினார் நடிகர் பாண்டியராஜன்.

செத்தா திரையுலகில் நுழைந்தது எப்படி..? படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரிடம் அடி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஓடியது எப்படி…” அதன் பிறகு சினிமாவை நேசிக்க தொடங்கியது எப்படி…? பார்த்திபனுடன் காதலில் விழுந்தது எப்படி..? விவாகரத்து ஆனதற்கு என்ன காரணம்..? உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் தன்னுடைய பேட்டியில் போட்டு உடைத்து இருக்கிறார்.

அவர் பேசியதிலிருந்து நடிகை சீதா தன்னுடைய 15 வயதில் சினிமாவில் நடிக்க வந்தார். அவருக்கு சினிமா என்றால் என்ன..? என்று கூட தெரியாது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளி கூட அவரிடம் கிடையாது.

அவருடைய தந்தை தான் வலுக்கட்டாயமாக அவரை சினிமாவில் நடிக்க வைத்தார். நடிகர் பாண்டியராஜன் ஒரு நிகழ்ச்சியில் நடிகை சீதாவை பார்த்திருக்கிறார். தாவணி பாவாடை கட்டிக்கொண்டு அழகாக அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டு வந்திருக்கிறார்.

இந்த பெண்ணை தன்னுடைய படத்தில் ஹீரோயின் ஆக்கினால் அருமையாக இருக்கும் என்று யோசித்த பாண்டியராஜன் நடிகை சீதாவின் தந்தையை அணுகி இருக்கிறார். தன்னுடைய படம் குறித்தும், ஹீரோயின் கதாபாத்திரம் குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து தன்னுடைய மகள் சீதாவிடம் படத்தில் நடிக்குமாறு கூறியபோது சீதா திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அதன் பிறகு பல்வேறு காரணங்களை கூறி அவருடைய அப்பாவே தன்னுடைய மகளை வலுக்கட்டாயமாக திரைப்படங்களில் நடிக்க அனுப்பி இருக்கிறார்.

ஆனால் சீதாவிற்கு சினிமா என்றாலே அறவே விருப்பம் இல்லாமல் இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளையும் கதையையும் உள்வாங்காமல் எந்த ஒரு ஆர்வம் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இதனால் பல டேக்குகள் போயிருக்கிறது. அந்த காலத்தில் டிஜிட்டல் ரெக்கார்டிங் எதுவும் கிடையாது. எல்லாமே ஃபிலிம் ரெக்கார்டிங் தான். இவர் சொதப்ப சொதப்ப டேக்குகள் செல்ல செல்ல ஃபிலிம் வீணாகிக்கொண்டிருக்கிறது.

இதனால் கடுப்பான பாண்டியராஜன்.. நீ எத்தனை டேக் வாங்குவ..? இங்க பாரு உன்னால எவ்வளவு வீணா போயிட்டு இருக்கு.. என்று கடுப்பாகி நடிகை சீதாவை அடித்து இருக்கிறார்.

பாண்டியராஜனிடம் அடி வாங்கிய சீதா அழுது கொண்டு தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு சென்று இருக்கிறார். இதனை அறிந்து கொண்ட பாண்டியராஜன் சீதாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருடைய அப்பாவிடம் நடந்த விஷயங்களை கூறி விவரமாக பேசியிருக்கிறார்.

அந்த நேரத்தில் பாண்டியராஜன் உன்னுடைய நல்லதுக்காக தான் உன்னை அடித்தார் நீ சினிமாவில் மிகப்பெரிய உயர்வுக்கு செல்ல வேண்டிய ஒரு பெண். இங்கேயே நின்று விடாதே.. என்றெல்லாம் கூறி மீண்டும் சீதாவை படப்பிடிப்பு அனுப்பியிருக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் சீதாவை சந்தித்த படக்குழுவினர் நீங்கள் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றால் எங்களுக்கெல்லாம் பட வாய்ப்புகள் கிடைக்காது. நீங்கள் ஒரு ஆள் படத்தில் இல்லை என்றால் இங்கு பட குழுவில் பணியாற்றக் கூடிய அத்தனை பேருக்கும் வேலை போய்விடும்.

உங்களால் எத்தனை குடும்பம் வாழ்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள் என்றெல்லாம் சீதாவிடம் கூறியிருக்கிறார்கள். அதன்பிறகு தன் வாழ்க்கை குறித்தும் சினிமா குறித்தும் ஒரு பிடிப்பு சீதாவிற்கு வந்திருக்கிறது.

அதன்பிறகு, கதையையும் கதாபாத்திரத்தையும் உள்வாங்கி நடிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகை சீதா. இவருடைய முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி. இப்படி சென்று கொண்டிருந்த சீதா புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை சீதாவை திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என கூறிய பார்த்திபன் ஒரு கட்டத்தில் பிரபல நடிகை சௌந்தர்யா என்ற ஒருவருடன் தகாத தொடர்பில் இருந்திருக்கிறார்.

இந்த விபரம் சீதாவுக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் ஒரு கட்டத்தில் பார்த்திபனை விவாகரத்து செய்து விட்டார். ஒரு காலத்தில் வீட்டை பெருக்குவதற்கு ஒரு ஆள்.. தன்னுடைய ஆடையை தேய்த்துக் கொடுப்பதற்கு ஒரு ஆள்.. செருப்பை போட்டுவிட ஒரு ஆள்.. மேக்கப் போடுவதற்கு ஒரு ஆள்.. சிகை அலங்காரம் செய்ய ஒரு ஆள்.. என வசதியாக வாழ்ந்து நடிகை சீதா ஒரு கட்டத்தில் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டதை நினைத்து நொந்து போயிருக்கிறார்.

தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது பார்த்திபனையை திருமணம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை பல்வேறு பேட்டியில் வேதனையாக பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் பார்த்திபன் சமீபத்திய ஒரு பேட்டியில் நான் செய்தது தவறு நான் இல்லாமலேயே என்னுடைய மகள்களை சீதா வளர்த்து பெரிய ஆளாக்கி இருக்கிறார் என்று நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

ஆனால் காலம் கடந்துவிட்டது. நடிகை சீதா மீண்டும் பார்த்திபன் சேர்ந்து வாழ வாய்ப்பே கிடையாது இடையில் சதீஷ் என்ற ஒரு சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சீதா. அதன்பிறகு அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பேசி இருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

Summary in English : The recent divorce between actress Seetha and actor Parthiban has sparked widespread discussion and speculation among fans and media alike. While the couple was once celebrated for their on-screen chemistry and off-screen camaraderie, the reasons behind their split appear to be multifaceted.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version