பீரோவில் இருந்த நகை அபேஷ்.. போலீசில் புகார் அளித்த சீதா..!

நடிகை சீதாவின் வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகை காணாமல் போனவை அடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தமிழ் திரை உலகில் எண்பதுகளில் நடிகையாக வலம் வந்த நடிகை சீதா பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான ஆண்பாவம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

இவரின் முதல் படமே இவருக்கு அமோக வெற்றியை தந்ததை அடுத்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் ரஜினிகாந்த், மோகன், கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். 

பீரோவில் இருந்த நகை அபேஷ்..

புதிய பாதை என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான பார்த்திபன் அந்த படத்தில் நடிகராகவும் நடிக்க அவரோடு இணைந்து நடித்த சீதா அவர் மீது காதல் கொண்டார். இதை அடுத்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். 

திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகிய இவர் முழு நேர குடும்பஸ்திரியாக மாறியதை அடுத்து அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு பெண்களை பெற்றெடுத்த நிலையில் ராக்கி என்ற ஒரு மகனை தத்தெடுத்தும் வளர்த்தார்கள். 

இந்நிலையில் பார்த்திபன் சீதா இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வரும் இவர் சீரியல் நடிகர் சதீஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இவர்கள் இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள் என்று தெலுங்கு ஊடகம் ஒன்றில் தனது கருத்துக்களை நடிகர் சதீஷ் பதிவு செய்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

போலீசில் புகார் அளித்த சீதா..

இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய சீதா அண்மைக்காலமாக தன் தோட்டத்தில் வளர்ந்த காய்கறிகள் குறித்தும் சமையல் செய்வது குறித்தும் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருவார். 

தற்போது நடிகை சீதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வீட்டில் வைத்திருந்த நகை காணாமல் போய்விட்டதாக புகார் ஒன்றை அழித்திருக்கிறார். 

அதில் அவர் தன்னுடைய வீட்டில் வைத்திருந்த அனைத்து நகைகளும் அப்படியே இருக்கின்ற சமயத்தில் இரண்டரை பவுன் ஜிமிக்கி மட்டும் காணவில்லை என்று புகார் கூறியதை அடுத்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 

Summary in English: Recently, actress Seetha made headlines after filing a police complaint regarding some missing jewelry. It seems that during a recent event, some of her prized possessions went missing, and she’s understandably upset about it. Jewelry holds not just monetary value but also sentimental significance, especially for someone in the spotlight like Seetha.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version