பிரபல பாடகி சுசித்ரா நடிகர் விஷால் மீது சமீபத்தில் குற்றச்சாட்டு ஒன்று வைத்திருந்தார். அவர் கூறியதாவது, நடிகர் விஷால் கையில் ஒயின் பாட்டிலுடன் போதையில் என்னுடைய வீட்டு கதவை தட்டினார். நான், கார்த்திக் குமார் இல்லை என்று சொன்னேன். அப்போதும் வீட்டிற்குள் வரவா என்று கேட்டார்.. நான் நோ சொல்லிவிட்டேன் எனக் கூறியிருந்தார்.
இது குறித்து பிரபல நடிகை ஷர்மிளா பாடகி சுசித்ராவை சரமாரியாக விளாசி இருக்கிறார். அவர் கூறியதாவது, சுசித்ரா ஒரு நல்ல பாடகி, திறமையானவர், அழகானவர். ஆனால், அவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை.
அவர் எந்த உலகத்தில் இருக்கிறார்..? வைரமுத்து, தனுஷ் மற்றும் சில நடிகர்கள் குறித்து சுசித்ரா பேசியிருந்தார். அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், விஷாலை பற்றி தவறாக பேசும் போது எனக்கு கோபம் வருகிறது.
ஏனென்றால் தனிப்பட்ட முறையில் விஷாலை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் என காட்டமாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். எத்தனையோ முறை youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் பாடகி சுசித்ரா அப்போதே விஷால் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என்று ஏன் சொல்லவில்லை.
அதை விட்டுவிட்டு திடீரென இப்போது ஏன் விஷால் குறித்து பேச வேண்டும். அதற்கு என்ன அவசியம்..? அதாவது சோசியல் மீடியாவில் எந்த விஷயம் டிரெண்டிங்கில் இருக்கிறதோ..? அதற்கு ஏற்றார் போல கதைகளை உருவாக்கி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சுசித்ரா.
சாதாரணமாக நாம் ஒரு நண்பர் வீட்டிற்கு போவதற்கு முன்பு போன் செய்துவிட்டு அவர்கள் வீட்டில் இருக்கிறார்களா..? இல்லையா..? என்று கேட்டுவிட்டு தானே செல்வோம்.
விஷால் போன்ற ஒரு பெரிய நடிகர் ஒரு ஆள்.. போன் எதுவும் செய்யாமல் திடீரென வந்தார்.. கையில் ஒயின் பாட்டில்.. வைத்திருந்தார் என்று சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை.
ஒரு நண்பர், உறவினர் வீட்டிற்கு வருகிறார் என்றால் நாம் என்ன செய்வோம்.. உடனே உள்ளே அழைத்து அமர வைத்து பேசுவோம். அவர் குடித்திருக்கிறாரா..? இல்லையா.. என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டோம். அப்படியே இருந்தாலும் வீட்டிற்கு உள்ளேயே வராத விஷால்.. குடித்திருந்தார் என்று எதை வைத்து கூறுகிறார் சுசித்ரா. அவருடைய பேச்சிலேயே நிறைய முரண்கள் இருக்கிறது.
எத்தனையோ ஹீரோயின்கள் இருக்கிறார்கள்.. நடிகர் சங்கத்தில் தலைவராக இருக்கிறார்.. நல்ல இடத்தில் இருக்கும் ஒரு நபர் இவர் வந்து என் வீட்டு கதவை தட்டினார் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை.
ஒன்று சுசித்ராவே விஷாலை அழைத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் சுசித்ரா பொய் சொல்கிறார் என அர்த்தம். விஷால் ஒரு நல்ல மனிதர்.. உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல் நலத்திற்கு என்ன ஆனது என ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதள பக்கங்கள் இணைய பக்கங்களில் அது குறித்த பேச்சுக்கள் அதிகமாக பார்க்க முடிகிறது.
இந்த நேரத்தில் விஷால் குறித்து நாம் ஏதாவது சொல்லுவோம் என்று வந்து பேசிக் கொண்டிருக்கிறார். இது போன்ற நபருக்காக கடவுளிடம் வேண்டுகிறீர்களா..? என்று கேட்பது எந்த வகையில் நியாயம்..? அவர் அப்படி உங்களுக்கு என்ன கெடுதல் செய்துவிட்டார்.. சுசித்ரா சொல்வதெல்லாமே கற்பனை கலந்த கதை தான்.
அதற்கு ஆதாரம் எதுவுமே கிடையாது என காட்டமாக பேசி இருக்கிறார் நடிகை ஷர்மிளா. இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Summary in English : In a recent turn of events, actress Sharmila has stepped up to show her support for actor Vishal amidst some swirling allegations involving singer Suchithra. Fans and followers have been buzzing about the situation, and Sharmila, known for her candid nature, didn’t hold back in addressing the claims.