“கிளாமர் காட்டுனா குறிப்பிட்டு வயசுக்கு மேல…” நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!

பிரபல நடிகை சுஜிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏன் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கவில்லை.. ஏன் கிளாமர் காட்டி நடிக்கவில்லை.. என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

இது குறித்து பேசி அவர், நீங்கள் சொல்வது போல சினிமா உலகில்.. ஒரு கிளாமரான உலகில் செல்ல வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்று கூறுகிறார்கள். அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது.

கிளாமராக நடித்தால் தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றால்.. அப்படிபட்டி வாய்ப்பு தேவையே கிடையாது.

ஒரு நடிகை எந்த வயதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். 80 வயதில் கூட அவர் நடிக்கலாம்.

ஆனால் கவர்ச்சி ஒன்றையே மூலதனமாக கொண்டு சினிமாவில் இயங்கினால்.. கிளாமர் காட்டி நடித்தால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காது.

சீரியல் என்பது சினிமாவினுடைய ஒரு பகுதி தான். சீரியல் வேறு சினிமா வேறு என்பதையே நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என பேசி இருக்கிறார் நடிகை சுஜிதா.

இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version