பாலிவுட்ல அதுக்குத்தான் என்னை கூப்பிடுறாங்க.. ஓவர் டோஸ் கடுப்பில் நடிகை தமன்னா!!

தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பிடித்து இருக்கும் நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டில்  தன்னை ஐட்டம் பாடல்களுக்கு ஆட அழைப்பதாக கடுப்பாக பேசி இருக்கக்கூடிய விஷயம்.

நடிகை தமன்னா தமிழ் திரையுலகை பொருத்தவரை கேடி படம் மூலம் அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பிடித்து இருப்பவர். 

அதுமட்டுமல்லாமல் தென்னிந்திய ரசிகர்களால் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படக் கூடிய இவர் பல படங்களில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அந்த வகையில் இவரது நடிப்பை பாகுபலி படத்தில் குறிப்பாக சொல்லலாம். 

பாலிவுட்ல அதுக்குத்தான் என்னை கூப்பிடுறாங்க..

திரை உலகில் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகை தமன்னா அண்மையில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்தது ரசிகர்களின் மத்தியில் கவனத்தை பெற்றது. 

இந்தப் படத்தை அடுத்து இவருக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. இதற்கு முன்பு அவர் ஜெய்லர் மற்றும் ஸ்ட்ரீ 2 படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதோடு கேமியோ கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அதுபோலவே பாலிவுட் திரைப்படத்திலும் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ஸ்ட்ரீ 2 படத்தில் ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு செம தியாக குத்தாட்டம் போட்டிருந்தார். இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத அளவு இந்த பாடல் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது தமிழ் திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர் இது போல ஆட்டம் போடும் பாடல்களுக்கு தான் அதிகளவு தன்னை அழைப்பதாக ஓவர் டோஸில் காண்டாகி இந்த விஷயத்தை பற்றி பேசி இருக்கிறார். 

ஓவர் டோஸ் கடுப்பில் நடிகை தமன்னா..

மேலும் தமிழில் ரஜினிக்காகவும், ஸ்ட்ரீ 2 படத்தின் இயக்குனர் தனது நண்பர் என்பதால் தான் அந்தப் பாடல்களுக்கு நடனமாட ஒத்துக்கொண்டதாக சொன்ன இவர் இதை அடுத்து தொடர்ந்து குத்தாட்டம் போடக்கூடிய பாடல்களை ஆட பலரும் தன்னை அணுகி வருகிறார்கள்.

எனவே இது போன்ற விஷயங்களை எனக்கு அடுத்தடுத்து செய்வதில் விருப்பம் இல்லை என்று கூறி இருப்பதோடு தமன்னா நடிப்பில் அடுத்ததாக உருவாக்கிய ஒடேலா 2 திரைப்படம் அடுத்த ஆண்டில் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லி இருக்கிறார். 

மேலும் இந்த படத்தில் இதுபோன்ற குத்தாட்டங்கள் ஆடிய தமன்னாவா இது என்று கேட்கக் கூடிய வகையில் சிவபக்தியாக நடித்து அசத்தியிருக்கிறார். எனினும் தமிழில் இதுவரை வாய்ப்புகள் ஏதும் வந்து சேரவில்லை என்பது கவலைக்கரமான விஷயம் தான். 

Summary in English: Tamannah Bhatia has been making waves lately, especially with the buzz surrounding her role in the much-anticipated movie “Stree 2.” Fans are eagerly discussing her chances of making a significant mark in Bollywood after this flick. With her impressive talent and charm, it’s no surprise that many believe she’s on the verge of a major breakthrough.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version