13 வருட தவம்.. நிறைமாத கர்ப்பம்.. முழு வயிறும் தெரிய கவர்ச்சி உடையில் வித்யா பிரதீப்.!

நடிகை வித்யா பிரதீப் திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவருடைய இந்த புகைப்படங்கள் சமூகவளைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கேரளாவை சேர்ந்த நடிகை வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் தற்போது வெளிநாட்டு மருத்துவ துறையில் பிரகாசித்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே மாடலிங் மீதும் சினிமாவில் நடித்தாக வேண்டும் என்றும் தீராத ஆசை கனவு கொண்டிருந்த இவருக்கு படிப்பும் ஒரு தடையாக அமையவில்லை. படிப்பு நடிப்பு என இரண்திலும் மிக தீவிரமாக பணியாற்றி தற்போது பலராலும் அறியப்படும் நடிகையாக இருக்கிறார்.

இவர் விருந்தாளி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது இந்த படத்தில் நடித்த மைக்கேல் ஈஸ்வர் என்பவரை காதலித்தார் பெற்றோர் சம்மதத்துடன் தன்னுடைய 18 வயதிலேயே திருமணமும் செய்து கொண்டார் நடிகை வித்யா.

மைக்கேல் ஈஸ்வர் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய காதல் மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை பயோ டெக்னாலஜி முதுகலை பட்டம் வரை படிக்க வைத்ததோடு ஒரு நடிகையாக இருப்பதற்கும் முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வித்யா பிரதீப் நடித்த சைவம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனை, தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்தது.

சன் டிவியில் நாயகி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்த பெருவாரியான இல்லத்தரசிகள் மட்டும் இல்லாமல் இளசுகளின் மனதையும் கொள்ளையடித்தவர் நடிகை வித்யா பிரதீப்.

இவருக்கு திருமணமான தகவலே பலருக்கும் தெரியாது. இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடர்ந்து பின் தொடரக்கூடியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வித்யா பிரதீப் தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Vidya Pradeep has taken the internet by storm with her stunning pregnancy photos that have gone viral across social media platforms. The captivating images showcase not only her radiant beauty but also her genuine joy and excitement as she embarks on this new chapter of motherhood.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version