“அவரை பாத்தாலே எனக்கு அந்த மூடு வந்துடும்..” கூச்சமின்றி கூறிய அதிதி ராவ் ஹைதாரி..!

பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தற்போது தமிழ் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் நடிகை மனிஷா கொய்ராலா குறித்த தன்னுடைய பார்வையை பகிர்ந்து இருக்கிறார்.

இவருடைய இந்த பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் சாரதா ராமநாதன் இயக்கத்தில் வெளியான சிருங்காரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு காற்று வெளியிடை என்ற திரைப்படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் அறிமுகம் பெற்ற நடிகையாக மாறினார் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.

குறிப்பிடும்படியான ரசிகர் பட்டாளமும் இவருக்கு உருவானது. அதனை தொடர்ந்து செக்கச் சிவந்த வானம், ஹே சினாமிகா உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சத்யாதீப் மிஸ்ரா என்ற நபரை திருமணம் செய்து கொண்டார், அவருடன் கிட்டத்தட்ட 11 ஆண்டு காலம் குடும்பம் நடத்திய நடிகை 2013-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இவர் கடந்த 2024-ம் வருடம் பிரபல தமிழ் நடிகர் சித்தார்த் சூரியநாராயணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அதிதி ராவ், நான் பம்பாய் படத்தில் நடிகை மனிஷா கொய்ராலாவை பார்த்தேன்.

அந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது நடிகை மனிஷா கொய்ராலாவால் நான் கவரப்பட்டேன். அவ்வளவு அழகாக.. உயிரோட்டத்துடன் நடித்திருந்தார்.

அவரை பார்த்த பிறகு தான் சினிமாவில் நானும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இன்னும் சொல்லப்போனால் அவருடைய கதாபாத்திரத்தில் நான் அப்படியே மூழ்கி விட்டேன்.

தியேட்டரில் இருந்து அப்படியே திரைக்கு தாவி விடலாமா..? அதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா..? என்றெல்லாம் யோசித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு மனிஷா கொய்ராலாவை பார்த்து நான் பூரித்துப் போனேன்.

அவரைப் பார்த்த பிறகு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மூடு எனக்கு வந்தது. அதுவரை, சினிமா மீது எனக்கு பெரிய ஆர்வம் எதுவும் இருந்ததில்லை. திரைப்படங்கள் பார்ப்பேன் அவ்வளவுதான்.

ஆனால் சினிமாவில் நானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிட்டது நடிகை மனிஷா கொய்ராலா தான் என்று பேசியிருக்கிறார். இதை சொல்வதற்கு எனக்கு கூச்சம் இல்லை. இப்போதும் மனிஷா கொய்ராலாவை பார்த்தால் நான் சிறு வயதில் இருந்த மூடுக்கு வந்துடுவேன். சினிமாவிற்கு நடிக்க வந்ததற்கு பலரும் பல காரணங்கள் கூறுவார்கள். என்னை கேட்டால் இதுதான் காரணம் என பதிவு செய்திருக்கிறார் அதிதி ராவ் ஹைதாரி.

Summary in English : Aditi Rao Hydari recently shared her thoughts on the iconic Manisha Koirala and how she made a lasting impression on her in the film “Bombay.” Aditi expressed that watching Manisha’s performance was a game-changer for her. She said, “I got impressed by Manisha Koirala in Bombay; she gave mood to my cinema entry.”

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version