தனுஷ்.. ஐஸ்வர்யா.. உறுதியான விவாகரத்து.. குழந்தைகளின் நிலை என்ன?

நட்சத்திர தம்பதிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து வாழ்ந்த நிலையில் கோர்ட்டில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து விவாகரத்தை உறுதி செய்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதனை அடுத்து அவர்களின் குழந்தைகளின் நிலை என்ன என்பது பற்றி என்ற இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து 18 ஆண்டு காலம் இனிப்பாக சென்ற இவர்களது மண வாழ்க்கை கருத்து வேற்றுமை ஏற்பட்டு உடைந்து போனது. 

இதனை அடுத்து பலரும் பல்வேறு வகைகளில் முயற்சி செய்தும் இவர்கள் குழந்தைக்காக இணைந்து வாழ கூடாதா என்ற கேள்விகளை எழுப்பியும் உடைந்த சட்டி எப்படி ஒட்டாதோ அதுபோல் பிரிந்த இவர்களது மனது மீண்டும் தனித்து வாழவே விரும்பியது.

தனுஷ்.. ஐஸ்வர்யா.. உறுதியான விவாகரத்து..

இந்த சூழ்நிலையில் தீபாவளி அன்று நடிகர் தனுஷ் தனது மனைவி வீட்டில் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்ற கிசுகிசுப்புகள் இணையம் முழுவதும் பரவியது. 

அதற்கு ஏற்றபடியே இவர்கள் நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் வெளி வந்த மெய்யழகன் திரைப்படத்திற்கு ஜோடியாக சென்றதைப் பார்த்து விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று பலரும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். 

எனினும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தொடரப்பட்ட இவரது மனு விசாரணைக்கு வந்த சமயத்தில் இரண்டு முறை இருவரும் நேரில் ஆஜராகாமல் இருந்ததை அடுத்து இந்த முறை நேரில் ஆச்சராக விவாகரத்து குறித்து இருவர் இடமும் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இருவரும் பிரிய கூடிய வகையில் பதில் அளித்து இருக்கிறார்கள். 

இதனை அடுத்து நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழக்கில் விவாகரத்துக் கொடுத்து தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இவர்களின் யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்களின் நிலை என்ன என்பது பற்றி தற்போது பேசும் பொருளாக இணையங்களில் பல்வேறு செய்திகள்  வருகிறது.

ஆனால் நீதிமன்றத்தை பொறுத்த வரை இவர்களின் வழக்கில் நீதிபதி விவாகரத்து குறித்து மட்டும் தான் தீர்ப்பு அளித்திருக்கிறார் குழந்தைகள் குறித்து எந்த விதமான கருத்தையும் வெளியிடவில்லை என தெரிய வந்துள்ளது. 

குழந்தைகளின் நிலை என்ன?

ஏனெனில் இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவு எடுத்து இருப்பதால் கணவன் மனைவி இருவருமே குழந்தைகள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இதற்கு முன் குழந்தைகள் அப்பாவுடன் ஒரு நாள் அம்மாவுடன் ஒரு நாள் இருந்தார்களோ அதுபோல இப்போதும் இருப்பார்கள். 

எனினும் குழந்தைகள் என்னதான் வளர்ந்து விட்டாலும் அவர்களின் பிரிவை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் அவர்களுக்குள் அந்த வலி கட்டாயம் இருக்கத்தான் செய்யும் எவ்வளவுதான் பணம் இருந்து பெரிய செலிபிரட்டியின் குழந்தைகள் என்றாலும் அப்பா அம்மாவை பிரிந்து வாழ்வது என்பது மிகப்பெரிய ரணமாகும். 

ரசிகர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு படி இருவரும் சேர்ந்து இருப்பார்கள் என்று இணையம் முழுவதும் பேச்சுகள் அடிபட்ட நிலையில் மூன்றாவது முறை நீதிமன்றத்தில் ஆஜராகும் போது சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்தனையும் உடைத்து போக கூடிய அளவு விவாகரத்து என்ற பேச்சு உறுதியாகிவிட்டது. 

எனவே தற்போது விவாகரத்தை பெற்றிருக்கக் கூடிய இவர்களின் குழந்தையின் நிலை பற்றி வழக்கறிஞர் பிரியதர்ஷினி பேட்டி ஒன்றில் இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

Summary in English : In a recent chat, Advocate Priyadarshini opened up about the much-discussed divorce between Dhanush and Aishwarya. It’s been a hot topic among fans and followers, and Priyadarshini shed some light on the legal aspects surrounding celebrity divorces. She emphasized that while it might seem like just another gossip story, there are real emotions and complexities involved.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version