இதை செய்யாதிங்க.. உங்க அழகு கெட்டுவிடும்.. எச்சரித்த நடிகர்.. காதில் கூட போட்டுக்காத ஐஸ்வர்யா ராய்..!

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஐஸ்வர்யா ராய் உடனான தன்னுடைய முதல் அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அது சார்ந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, நான் ஐஸ்வர்யா ராயை முதன் முதலில் பார்த்தது ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பில் தான் பார்த்தேன்.

அந்த படப்பிடிப்பில் அவர் அவ்வளவு அழகாக இருந்தார். எதனால் இவருக்கு உலக அழகி பட்டம் கொடுத்தார்கள் என்ற கேள்வி எனக்குள் இருந்தது.

அதற்கான பதில், அன்று ஐஸ்வர்யா ராயை நேரில் பார்க்கும் போது தான் கிடைத்தது. உடனே அவரிடம் சென்று பேசினேன்.

சினிமா உலகம் போட்டி நிறைந்தது நீங்கள் சினிமாவில் நடிக்க வேண்டாம் திரை உலகில் நுழைய வேண்டாம் இங்கு கடினமான மோசமான போட்டிகள் இருக்கின்றன. இது உங்களுடைய அழகை கெடுக்கும் உங்களுடைய மனதையும் பாதிக்கும் இவ்வளவு பேரழகியாக இருக்கும் உங்களுடைய அழகு கெட்டுவிடக்கூடாது என்று என்னுடைய விருப்பத்தை பதிவு செய்தேன்.

மேலும் சினிமாவில் நீங்கள் ஒருபடி மேலே சென்றால் 500 பேர் சேர்ந்து கொண்டு உங்களை கீழே எழுப்பார்கள் என கூறினேன். அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஐஸ்வர்யா ராய் தன்னுடைய முடிவை கடைசிவரை மாற்றிக்கொள்ளவே இல்லை.

திரைப்படங்களில் நடித்தே தீருவேன் என்று நடித்தார் என பேசி இருக்கிறார் சஞ்சய் தத். இப்படி உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அழகு கெட்டுவிடக்கூடாது என்று அட்வைஸ் செய்த நடிகர் சஞ்சய் தத்தின் பேச்சை கண்டு கொள்ளாமல் தற்போது மிகச் சிறந்த நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இந்த விஷயம் குறித்து உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version