AK வரார் வழி விடு.. பொங்கலுக்கு வெளியாகிறது “விடாமுயற்சி” லைகாவின் மாஸ்டர் மூவ்..!

ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விடுமுறை குறிவைத்து வெளியாக இருந்த விடாமுயற்சி தரும் திடீரென ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அறிவிப்பை வெளியிட்டிருந்தது இது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

இதற்கு படத்தின் கிராபிக்ஸ் குழு மற்றும் போஸ்ட் புரொடக்சன் குழு தான் காரணம் என்று கூறப்பட்டது. அதேசமயம் இந்த படம் ஹாலிவுட் படமான Breakdown படத்தின் ரீமேக் என்றும் இதனுடைய ரீமேக் உரிமையை முறையாக பெறாமல் படத்தை தயாரித்து விட்டார்கள் இதனால் தான் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு வேளை ரீமேக் உரிமையை இந்த படத்தை வெளியிட்டால்.. மிகப்பெரிய பிரச்சனையில் தயாரிப்பாளர் சிக்கி விடுவார்.. இதனால் தான் ரிலீஸ் தேதியை தள்ளி போட்டு இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஹாலிவுட் படமான Breakdown படத்தின் ரீமேக் உரிமைக்காக இறுதியாக 80 கோடி ரூபாய் பேரம் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், லைகா நிறுவனம் இந்த பணத்தை கொடுப்பதற்கு அதற்கு பதிலாக படத்தின் ஒரு பகுதி வெளியிட்டு உரிமையை குறிப்பிட்ட பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தந்துவிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதற்கு பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் பொங்கலுக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகிவிடும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version