அடி பொளக்கும் AMARAN..! அதிர வைக்கும் Day 2 வசூல்..!

Sivakarthikeyan‘s latest flick, AMARAN, is making waves at the box office! After an impressive opening, the movie raked in a whopping collection on its second day.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் பெருவாரியான அரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இந்த படம் அவருடைய மனைவியின் பார்வையில் இருந்து அவருடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை திரைக்கதையாக கொண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

அனைவருக்கும் தெரிந்த கதையாக இருந்தாலும் அதனை விறுவிறுப்பு சுறுசுறுப்பு மாறாமல் திரைக்கதை அமைத்து ஒரு முன்னணியில படமாக கொடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம்.

அந்த சவாலை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவியிடம் இந்த படத்திற்கான உரிமையை பெற்ற பிறகு அவருடைய விருப்பப்படி ஹீரோவை தேடியதின் காரணமாக சிவகார்த்திகேயனை இந்த படத்திற்கு ஹீரோவாக தேர்வு செய்தோம் என கூறியிருக்கிறார் படத்தின் இயக்குனர்.

மேஜர் முகுந்து வரதராஜனுக்கு தமிழ் மீது இருக்கும் பற்று அளப்பரியது என்றும் முற்றும் முழுதாக தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு நடிகர் இந்த படத்தில் நடித்த பொருத்தமாக இருக்கும் என்றும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுடைய மனைவி ரெபேக்கா வர்கீஸ் வேண்டுகோள் வைத்ததன் பேரில் சிவகார்த்திகேயனை இந்த படத்தின் ஹீரோவாக தேர்வு செய்து இருக்கிறார்கள்.

150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 21.40 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இரண்டாம் நாளும் விடுமுறை நாள் என்பதால் 19.25 கோடி ரூபாய் வசூல் செய்து முன்னணி ஹீரோக்களுக்கு நிகரான வசூலை இந்த சிவகார்த்திகேயன் படம் செய்திருக்கிறது.

இது மிகப் பெரிய மார்க்கெட்டை சிவகார்த்திகேயனுக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறது.

Summary in English : Sivakarthikeyan is on a roll with his latest movie, AMARAN! After an exciting opening day, the film has raked in an impressive 19.25 crores on its second day. Fans are absolutely buzzing about it, and it’s no surprise why—Sivakarthikeyan’s charm combined with a gripping storyline has really struck a chord.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version