அமரன் முதல் நாள் வசூல்..! முன்னணி நடிகர்களின் படங்களை அடித்து துவம்சம் செய்து சாதனை..!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

தனக்கான பாக்ஸ் ஆபிஸில் தனிய இடத்தை பிடித்து வருகிறார். அதனை ஒவ்வொரு படத்திற்கும் உயர்த்திக்கொண்டு செல்கிறார்.

நடிகர்கள் விஜய் அஜித்துக்கு பிறகு அடுத்த கட்ட நடிகர்களில் வசூல் வேட்டையனாக நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் என்னும் ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் கையில் எடுத்து அதனை ஜனரஞ்சகமான ஒரு படமாக கொடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் தியேட்டர் கண்ணீர் சிந்தி கொண்டே வரும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

இந்த தீபாவளிக்கு வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களை மகிழ்வித்து அனுப்பி இருக்கிறது என்று கூறலாம்.

அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படமும் நல்ல படமாக ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரசிகர்களை திருப்தி படுத்துவதாக அமையவில்லை.

குறிப்பாக இந்தியன் 2 மற்றும் வேட்டையன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை கவர தவறின. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் இந்த ஆண்டின் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் நடத்திய படமாக மாறி இருக்கிறது.

அமரன் முதல் நாள் வசூல்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிகபட்சமாக 38 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் 20.50 கோடி ரூபாயும்.. இந்தியன் 2 திரைப்படம் 13.50 கோடி வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் 15.20 கோடி ரூபாய் வசூல் செய்து முன்னணி நடிகரான நடிகர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை ஓரம் கட்டி இருக்கிறது.

இதன் மூலம் இந்த வருடம் அதிக ஓப்பனிங் செய்த படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது அமரன்.

Summary in English : Finally, Sivakarthikeyan’s Amaran overtook Indian 2 Day 1 Collection in All over Tamilnadu.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version