விவாகரத்தான DD..! ஒருதலை காதல் பற்றி தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தனியார் சேனலில் தொகுப்பாளியாக பிரபலமானவர் திவ்யதர்ஷினி. இவர் சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தன்னுடைய பள்ளிக்காலத்திலேயே மீடியாவில் நுழைந்தவர்.

சன் டிவியில் ஒளிபரப்பான திகில் தொடரான தடயம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் தொகுப்பாளினி என்ற இவருடைய அடையாளம் தான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு அறிமுகத்தை கொடுத்திருக்கிறது.

இடையில் தன்னுடைய நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார் திவ்யதர்ஷினி. ஆனால், அவர்களுடைய திருமணம் வாழ்க்கை நிறைவு பெறவில்லை. பாதியிலேயே முடிந்தது. இ

ந்த நிலையில் DD குறித்து பிரபல தொகுப்பாளர் ரமேஷ் நல்லாயன் சில விஷயங்களை பேசி இருக்கிறார். அவருடைய இந்த பேச்சைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

அவர் கூறியதாவது, எனக்கும் திவ்யதர்ஷினிக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. நல்ல நட்பு அது. எனக்கு திவ்யதர்ஷினியை மிகவும் பிடிக்கும். அவரை ஒரு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டேன்.

போகப்போக அவர் மீது எனக்கு ஒரு கிரஷ் வந்தது. அவரும் தொகுப்பாளர் நானும் தொகுப்பாளர் எங்களுடைய இரண்டு பேரின் வாழ்க்கையும் கொஞ்சம் ஒத்துப் போவதாக உணர்ந்தேன்.

ஆனால், என்னுடைய க்ரஷை அவரிடம் கூறுவதற்கு மிகவும் பயந்தேன். ஒரு கட்டத்தில் அவருடைய அவரிடம் காதலை சொல்லிவிடலாம் என்று ஜோடி செட்டிற்கு சென்றேன். என்ன நடந்தாலும் சரி என்று கூறி விட வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

அப்போது, அங்கிருந்தவர்கள் திவ்யதர்ஷினியின் நிச்சயதார்த்தம் குறித்த தகவல்களை கூறினார்கள். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. நான் என்னுடைய காதலை சொல்லாமல் காலம் தாழ்த்தியது கூட நான் திவ்யதர்ஷினி தவற விட்டதற்கு காரணமாக இருக்கலாம்.

அவர் ஒப்புக்கொள்கிறார்.. இல்லை.. என்பதெல்லாம் இரண்டாவது விஷயம். நான் அவரை காதலித்தேன் அதனை வெளிப்படையாக சொல்லாமல் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டேன். அவருடைய நிச்சயதார்த்த செய்தி கேள்விப்பட்டதும் இப்படி ஒரு நல்ல பெண்ணை மிஸ் செய்கிறோமே என்று எனக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது என்று பேசி இருந்தார் ரமேஷ் நல்லாயன்.

Summary in English : So, here’s a fun little story from the world of anchors! Ramesh Nallayan, the charismatic host we all know and love, once opened up about his crush on none other than Anchor Divyadharshini. Can you believe it? He shared that he had a serious soft spot for her and thought she was just amazing. But then came the plot twist—Ramesh found out that DD was getting engaged to another guy!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version