“நயன்தாராவை பற்றி பேசினாலே எரிச்சலா இருக்கு..” கொந்தளித்த அனிகா சுரேந்திரன்..!

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் நீங்கள் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொள்கிறீர்கள். அப்படி பேட்டியில் கலந்து கொள்ளும்போது உங்களை எரிச்சல் ஊட்டும் ஒரு சில கேள்விகள் இருக்கும்.

அது எப்படியான கேள்விகள்..? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டுவிட்டு சிறிது நேரம் யோசித்த அனிகா சுரேந்திரன் பொதுவாக நான் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் கொடுத்து விடுவேன்.

ஆனால் என்னைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பும் போது நெருடலாக இருக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய தொகுப்பாளர். இல்லை, குறிப்பிட்ட இந்த கேள்வியை கேட்டால் எனக்கு எரிச்சலாக இருக்கிறது என்று சொன்னால் அது எந்த கேள்வி..? அப்படி ஏதாவது கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டிருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அனிகா சுரேந்திரன், ஆம் கேட்டிருக்கிறார்கள்.. எந்த பேட்டியில் கலந்து கொண்டாலும் நீங்கள் நயன்தாராவுடன் பணியாற்றி இருக்கிறீர்கள்.. அவருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது..? அவர் உங்களுக்கு ஏதாவது அட்வைஸ் கொடுத்தாரா..? அஜித் சார் உடன் நடித்த அனுபவம் எப்படி இருக்கிறது..? மம்முட்டி சார் உடன் நடித்த அனுபவம் எப்படி இருக்கிறது..? என்று கேட்பார்கள்.

இந்த கேள்வியை எந்த நடிகர்களிடம் கேட்டாலும் நல்ல அனுபவத்தை தான் சொல்வார்கள். இதில் ஏதாவது புதிய அனுபவம் இருக்கப் போகிறதா..? என்று கேட்டால் கிடையாது.

அவர்களெல்லாம் மிகச்சிறந்த நடிகர்களாக ஏற்கனவே மக்கள் மத்தியில் நின்று விட்டார்கள். அவர்களை சுற்றியே கேள்வி எழுப்பும் போது இங்கே தனிப்பட்ட முறையில் என்னை பற்றிய அந்த எந்த விஷயத்தையும் கேட்காமல் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் அவர்கள் குறித்து அவர்களை சுற்றி சுற்றி கேள்வி எழுப்பி கொண்டிருப்பார்கள். இப்படி பிரபலமாக இருக்கும் நடிகர்களை பற்றியே பேசினால் அது எனக்கு எரிச்சலூட்டும்.

நான் அந்த படத்தில் எப்படியான சவால்களை எதிர்கொண்டேன். என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி கேள்வி எழுப்பினால் அது எனக்கும் பதில் சொல்ல ஈசியாக இருக்கும் அதே போல என்னைப் பற்றி ரசிகர்கள் தெரிந்து கொள்ளவும் வழி வகுக்கும்.

ஆனால், ஏற்கனவே பிரபலமாக இருக்கும் நடிகர்களை பற்றிய கேள்வி கேட்கும் போது அங்கே நமக்கு உண்டான இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. இது எனக்கு எரிச்சல் கொடுக்கக் கூடிய விஷயம் என பேசியிருக்கிறார். இதனை, அதே பேட்டியில் கலந்து கொண்ட நடிகை ரஜிஷா விஜயனும் ஆமோதித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : In a recent interview, actress Anikha Surendran opened up about something that really gets under her skin: those pesky questions about her experiences with leading actors like Nayanthara, Ajith, and Mammootty. She candidly admitted that she finds it a bit irritating when interviewers focus too much on her co-stars instead of her own journey and talent.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version