அண்ணா பல்கலை பாலியல் சம்பவம்.. அந்த இடத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர வைக்கும் CCTV காட்சிகள்..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்.

இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழக முழுதும் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சென்னை கிண்டியில் அமைந்திருக்கக் கூடிய இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் நடுங்க வைக்கும் கொடூரம் நடைபெற்று இருக்கிறது. ]]

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்து பட்டம் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்களுக்கான தங்கும் விடுதி வசதியும் இருக்கிறது.

இதில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். சிலர் வெளியிடங்களில் ஹோட்டல்களிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் தங்கி இருக்கின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்போதும் பாதுகாப்பு நிறைந்திருக்கும். சாதரணமாக யாரும் உள்ளே நுழைந்து விடுவது என்பது கடினமான விஷயம். இப்படி பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது.

இந்த பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு 19 வயது தான் ஆகிறது என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில், கல்லூரி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் இவருக்கு அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்தவரும் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன் தினம் இருவரும் மறைவான இடத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தில் தான் இந்த மாணவிக்கு இந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது.

அங்கு வந்த இரண்டு பேர் காதலனை பலமாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த அந்த மாணவியை மிரட்டி அவருடைய உடைகளை கழட்டி வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். மேலும் மாணவியையும் பலமாக தாக்கி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன அந்த பெண்.. காதலன் மூலம் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரதிராஜன் அவர்கள் தலைமையில் தனியாக விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. பலத்த பாதுகாப்பு கொண்ட அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த நேரத்தில் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மாணவர்கள் அல்லது ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டார்களா..? அல்லது இரண்டு நபர்கள் மட்டும் தானா..? கல்லூரியில் வேலை செய்யும் நபர்கள் யாரேனும் இதனை செய்தார்களா..? அல்லது வெளியில் இருந்து வந்தவர்கள் இதனை செய்தார்களா..? என்று கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்ற அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிளை கைப்பற்றி அதன் அடிப்படையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது யார்..? என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன் முதற்படியாக ஒருவரை கைது செய்திருக்கக் கூடிய காவல்துறை இன்னும் ஒரு நபரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார்கள். விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Anna University assault case, Chennai campus crime news, Sexual assault in Anna University, Kotturpuram police investigation,Chennai shocking crime incident,  அண்ணா பல்கலைகழகம் வன்முறை, சென்னையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை,பாலியல் வன்முறை சென்னை, கோட்டூர் புறம் காவல் துறை விசாரணை, அண்ணா பல்கலை , சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version