பிக்பாஸ் எனக்கு இதை தான் குடுத்துச்சு.. நடிகை ரித்விகா பேச்சை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!

BiggBoss contestant Rythvika recently opened up about how her time on the show changed her life in a big way.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ரித்விகாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியால் உங்களுக்கு கிடைத்தது என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு என்ன கிடைத்தது என்றால் நிறைய பணம் கிடைத்தது.

நான் பல பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி இருந்தேன். EMI கட்டுவதையே என்னுடைய வாடிக்கையாக கொண்டிருந்தேன். என்னுடைய சம்பளம் முழுதும் EMI கட்டுவதிலேயே கழிந்தது.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வருமானம் என்னுடைய EMI பிரச்சனைகளை தீர்த்து கொடுத்தது. படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள சென்று விட்டேன் என்று கூறுகிறார்கள்.

ஆனால், நான் நடித்த சில திரைப்படங்கள் அந்த நேரத்தில் ரிலீஸ் ஆகாமல் இருந்தன. இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு வந்தது.

அதனை ஏற்றுக்கொண்டு அதில் பங்கேற்க சென்றேன். டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வு செய்யப்பட்டேன். நமக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத போது அதற்கான வழிகள் ஏதேனும் நம் கண்ணில் தென்பட்டால் அதனை நாம் வேண்டாம் என மறுப்போமா..?

ஏன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசனே இதனை ஒப்புக் கொண்டார். நான் நடித்த படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன. இதனால் எனக்கு வருமானம் இல்லை என்று நான் கூறிய போது.. அப்போ நீங்க நம்ம ஆளு என்று கூறினார்.

இதன் மூலம் அவருடைய படங்களும் சில படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன. சில படங்கள் தோல்வியடைந்தன. அவருக்கும் பொருளாதார ரீதியான துணை தேவைப்பட்டபோது பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தன்னுடைய பணியை மேற்கொண்டார் கமல்ஹாசன்.

இவ்வளவுதான் விஷயம். ஆனால், தற்போது நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்தால் ஏதோ ஸ்கிரிப்ட் எழுதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கே வருகிறது அந்த அளவுக்கு தான் இருக்கின்றது.

மற்றபடி நடிகர் விஜய் சேதுபதி நடிகர் கமலஹாசன் இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாகவே தொகுத்து வழங்குகிறார்கள் என்று தான் நான் கூறுவேன் என கூறியிருக்கிறார் பிக் பாஸ் ரித்விகா. 

Summary in English : BiggBoss contestant Rythvika recently opened up about how her time on the show was a total game changer for her. She shared that landing a spot in BiggBoss not only brought her fame but also some serious financial perks. With the good remuneration she received, Rythvika managed to settle all her EMIs, which is no small feat!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version