வீறு கொண்டு எழுந்த நடிகர் போஸ் வெங்கட்.. பங்கம் பண்ணும் தவெக தொண்டர்கள்.. இது என்ன கொடுமை..

நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகம் கட்சியை அறிவித்து முதல் மாநாட்டை வெற்றி கரமாக நடத்தி முடித்து தன்னுடைய கொள்கைகளை பொதுவெளியில் எடுத்து வைத்திருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக நாங்கள் பெரியாரை அரசியல் ஆசனாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவருடைய கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதை தவிர்த்து சமூக நீதி, ஏற்றத்தாழ்வட்ட சமுதாயம் உள்ளிட்டவற்றை உருவாக்க அவர் முன்னெடுத்த பல விஷயங்களை பின் தொடர்வோம் என வெளிப்படையாக அறிவித்திருந்தார் நடிகர் விஜய்.

தொடர்ந்து பேசிய அவர், இங்கே ஒரு கட்சி பாசிசம் பாசிசம் என சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என இரு வேறு சமூகங்களாக பிரித்து பயமுறுத்தி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

பெரியார் அண்ணா பெயரில் திராவிட மாடல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என திமுகவுக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து திமுக ஆதரவு பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் பலரும் நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் பிரதானமாக பேசப்படக்கூடிய ஒரு விவாதம் தான் நடிகர் போஸ் வெங்கட் பேசியுள்ள விஷயம்.

தன்னுடைய எக்ஸ் தள பதிவில் உன் கூடத்தான் அரசியல் சண்டை போடணுமா என்று நடிகர் விஜய்யை ஏளனம் செய்யும் விதமாக வீறு கொண்டு பேசி இருக்கிறார் போஸ் வெங்கட்.

இதே போஸ் வெங்கட் தான் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சூரியா அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசி இருந்தார்.

இவருடைய நிலைப்பாடு என்ன..? என்று யாருக்குமே புரியவில்லை. இதனை தொடர்ந்து இவருடைய பேச்சை கலாய்க்கும் விதமாகவும் கிண்டல் செய்யும் விதமாகவும் மீம்களை இணைய பக்கங்களில் பறக்க விட்ட வருகின்றனர் TVK தொண்டர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version