இதெல்லாம் ஒரு பொழப்பு.. ஒல்லி நடிகர் பண்ணும் நாசவேலை..! கழுவி ஊத்தும் இளம் இயக்குனர்கள்.!

ஒல்லி நடிகர் குறித்து அவ்வப்போது சார்சையான விஷயங்கள் வெளியாவது வாடிக்கை.ஊருக்குள் எந்த பிரச்சனையும் நடந்தாலும்… அதாவது, சினிமா என்ற ஊருக்குள் எந்த பிரச்சனையும் நடந்தாலும் அங்கே இந்த ஒல்லி நடிகரின் பெயர் அடிபடும்.

இப்போது பிரச்சினை நடக்கும் இடத்தில் ஒல்லி நடிகர் இல்லை.. பிரச்சனையே ஒல்லி நடிகர்தான் என்ற ஒரு விஷயம் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதாவது ஹிட் படங்களை கொடுக்கும் இளம் இயக்குனர்களை வளைத்து போட்டு அவர்களுடன் அடுத்த அவர்களின் அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி.. கதை தயார் செய்ய சொல்லி.. கடைசி வரை படத்தையும் துவக்காமல்… கதையையும் ஓகே செய்யாமல.. என இழுத்தடித்துக் கொண்டே வருகிறாராம் அந்த ஒல்லி நடிகர்.

சைக்கோ படம் ஒன்றை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனரை வரவழைத்து அடுத்த படம் உங்களோடு செய்கிறேன் என கூறியிருக்கிறார் ஒல்லி நடிகர். ஆனால், அந்த படம் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை இப்போது ஆரம்பிக்கலாம்.. அடுத்த மாதம் ஆரம்பிக்கலாம்.. இரண்டு மாதம் கழித்து ஆரம்பிக்கலாம் என இழுத்தடித்துக் கொண்டே வருகிறாராம்.

இதனால் வேறு எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார் அந்த இயக்குனர். அந்த படம் வெற்றியான சமயத்தில் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்தது. அதில், ஏதாவது ஒன்று, இரண்டை தேர்வு செய்திருந்தால் இந்நேரம் அவர் குறைந்தபட்சம் மூன்று படங்களையாவது இயக்கியிருப்பார்.

ஆனால், நம்பிக்கை வார்த்தை கூறி அவருடைய நான்கு ஆண்டுகளை வீணாக்கி விட்டார் ஒல்லி நடிகர் என்று கூறுகிறார்கள்.

மறுபக்கம் கடவுள் பெயர் கொண்ட நடிகரின் சண்டை படம் ஒன்றின் இயக்குனரையும் இதே போல அழைத்து அடுத்த படத்தை உங்களோடு சேர்ந்து செய்கிறேன் எனக்கூறி அவருக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்து கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரோடும் இன்னும் எந்த படத்தில் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார் ஒல்லி நடிகர்.

தற்போது புது பலியாடாக ஒரு இயக்குனர் சிக்கி இருக்கிறார் சமீபத்தில் திருமண நடிகரின் கிரிக்கெட் சார்ந்து வெளியான திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அந்த படத்தில் இயக்குனர் அழைத்து வந்து அடுத்த படம் உங்களோடு தான் எனக்கூறி அவருக்கும் இதே ஃபார்முலாவை செய்து கொண்டிருக்கிறாராம்.

தன்னுடைய பட்டியலில் மூன்றாவது பலியாடாக கிரிக்கெட் இயக்குனரை சேர்த்திருக்கிறார். இப்படி மூன்று இளம் இயக்குனர்களின் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் இந்த ஒல்லி நடிகர் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது .

Summary in English : In the ever-evolving landscape of cinema, the relationship between actors and directors is crucial for creating groundbreaking films. However, recent buzz surrounding a slim actor allegedly wasting the time of a young, talented director raises serious concerns about artistic integrity and collaboration in the industry.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version