4 மாதத்தில் திருமணம்.. 15 வருஷ காதல்.. வாழ்த்து சொன்ன விஜய்..! கீர்த்தி சுரேஷ் டும் டும் டும்..!

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இன்னும் நான்கு மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற தகவல் தெலுங்கு மீடியாக்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

பொதுவாக சினிமாவில் முன்னணியில் இருக்கும் திருமணமாகாத நடிகைகள் குறித்து அவ்வப்போது திருமண செய்திகள் கிசுகிசுவாகவும் வதந்தியாகவும் வாடிக்கை.

அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அவை எதுவும் உண்மையாக நடந்தது இல்லை.

அந்த வகையில், தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதாவது உண்மையாக இருக்குமா..? என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட 15 வருடமாக ஒருவரை காதலித்து வருகிறார் என்றும் தன்னுடைய கல்லூரி காலம் முதலே அவரை காதலித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்றும் கூறுகிறார்கள்.

தன்னுடைய கல்லூரிக்கால நண்பரான துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று அக்கட தேசத்தை ஊடகங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் இடம் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறினார்.

உடனே, அப்படி என்றால் நீங்கள் சிங்கிளா..? என்று கேட்டதற்கு நான் சிங்கிள் கிடையாது என்று பதில் கொடுத்திருந்தார். இப்படி, தன்னுடைய காதல் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கொடுத்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்த நான்கு மாதங்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் 2025 பிப்ரவரியில் நிச்சயதார்த்தமும் மார்ச் மாதம் திருமணமும் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனை தொடர்ந்து நடிகர் விஜயை கீர்த்தி சுரேஷிற்கு அனைவரும் தன்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்திருக்கிறார் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.

இந்த தகவல் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Summary in English : The buzz surrounding actress Keerthy Suresh’s rumored marriage to her college friend, whom she has loved for the past 15 years, is creating quite a stir in the entertainment industry. Fans and media alike are abuzz with excitement over this potential union. The couple’s long-standing relationship adds a layer of depth and authenticity that many admire. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version