இதுக்குத்தான் இவ்ளோ நாடகமா..? கிழவனை கல்யாணம் பண்ணி.. ஒரே வீட்டில் தனுஷ் ஐஸ்வர்யா.. கேவலம்..!

கடந்த சில நாட்களாக நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைந்து வாழ விரும்புகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான் என சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு அவர்கள் பிரபலங்களின் விவாகரத்து குறித்து தன்னுடைய பொதுவான கருத்தை தன்னுடைய சமீபத்திய யூடியூப் வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, இந்த தீபாவளி பண்டிகையை தன்னுடைய மாமனார் ரஜினிகாந்த் தன்னுடைய குழந்தைகள் மற்றும் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

சமீபத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படத்தை தனுஷ், ஐஸ்வர்யா என இருவரும் ஜோடியாக வந்து பார்த்தனர். இருவரும் சேர்ந்து வாழ்வது மிகப்பெரிய மகிழ்ச்சியான ஒரு விஷயம். அதற்கு முன்பு பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை.. அவர்களுடைய திருமணம்.. அவர்களுடைய விவாகரத்து.. குறித்து எதற்கு தூக்கி வைத்துக்கொண்டு பேசுகிறீர்கள்..? என்று பலரும் விமர்சனங்களை வைக்கிறார்கள்.

அதற்கு என்ன காரணம்..? என்று நான் சொல்கிறேன். பிரபலங்கள் அவர்களுடைய விவாகரத்து என வரும் பொழுது அதை ஏன் பேசுபொருள் ஆக்குகிறோம் என்றால் அவர்கள் பிரபலங்கள் சாதாரண ஆட்கள் கிடையாது.

பிரபலங்கள் எனும் பொழுது அவர்களை லட்சக்கணக்கான பேர்.. கோடிக்கணக்கான பேர்.. பின் தொடர்வார்கள். பிரபலங்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எடுக்கக்கூடிய ஒரு தவறான முடிவை முன்மாதிரியாக அவர்களை பின்தொடரக்கூடிய ரசிகர்கள் எடுத்துக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

என்னுடைய தலைவனே விவாகரத்து பண்ணிட்டான். எனக்கென்ன இதெல்லாம் பெரிய மேட்டரா..? என்று தங்களுடைய வாழ்க்கையின் மீது பிடிப்பில்லாமல் நகர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

அப்படி யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்கு தான் பிரபலங்களின் விவாகரத்து குறித்து பேசுகிறோம். நான் மட்டுமல்ல நிறைய பேர் பேசுகிறார்கள். சமீபத்தில் கூட பிரபல நடிகை திவ்யா ஸ்ரீதர் என்பவர் கிரிஷ் வேணுகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர் திருமணம் செய்து கொண்ட போது ஒரு கிழவனை கல்யாணம் பண்ணி இருக்கியே..? இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவைதானா…? இந்த வயசுல உனக்கு அந்த ஆம்பள கேட்குதா..? என்று மோசமாக அவரை சமூக வலைதள பக்கங்களில் விமர்சிக்க தொடங்கினார்கள்.

இதெல்லாம் பார்த்து கடுப்பான திவ்யா ஸ்ரீதர் நான் உடலுறவுக்காக ஒன்றும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னுடைய பாதுகாப்புக்காகவும் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

ஒரு வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்றால் அங்கே கணவர் அல்லது அப்பா என்று ஒரு ஆண் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் வீட்டில் யாரும் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டார்கள்.

அந்த ஆண் ஒரு நோஞ்சானாக கூட இருக்கட்டும். அந்த வீட்டில் ஒரு ஆண் இருக்கிறார் என்ற பயம் இருக்கும். அந்த பெண்ணிடம் யாரும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டார்கள். இதுதான் நிதர்சனம்.

தன்னுடைய குழந்தைகளின் இரண்டு மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார் நடிகை திவ்யா ஸ்ரீதர். உடலுறவு மட்டும்தான் வாழ்க்கை என்பதை அவர் மறுக்கிறார் மாறாக தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமென்று அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவருக்கு திருமணம் குறித்தும்.. ஆண் துணை குறித்தும் புரிதலை அவர் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது பிரபலங்கள் விவாகரத்து செய்து இருக்கிறார்கள் என்றால் அதனை அப்படியே விட்டுவிட்டால் அதனை பலரும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அப்படி யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் நம்முடைய விவாதம். இன்னொரு விஷயம் சொல்கிறேன். டிஷ்யூம் படத்தில் நடித்த கின்னஸ் பக்ரு அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று அறிவிப்பு வெளியான போது இந்த குள்ளனுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பா..? குள்ளனுக்கு கல்யாணமா..? இவன் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறான்…? என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள்.

அந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கப் போகிறான் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். இதனால் பயந்து போன கின்னஸ் பக்ரு அந்த பண்ணிடமே சென்று நான் உன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை. உன்னுடைய வாழ்க்கை வீணாகி விடுமோ என்ற பயம் எனக்கு இருக்கிறது. எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என திருமணம் செய்து கொள்ள இருந்த பெண்ணிடம் போய் சொல்லி இருக்கிறார்.

ஆனால் அந்த பெண் நான் அப்படி சொன்னேனா..? நான் உங்களை தான் திருமணம் செய்து கொள்வேன். நான் உங்களுடைய உயரத்தை பார்க்கவில்லை. உங்களுடைய மனசை பார்க்கிறேன். உங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்று கூறி அவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இருந்த குழந்தைகளுக்கு தந்தையாக நல்ல குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கின்னஸ் பக்ரு. பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிகர்கள் அஜித் பல்வேறு சின்னத்திரை நடிகர்கள் தங்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி இணைய பக்கங்களில் பகிர்வார்கள்.

இதற்கு என்ன காரணம்..? என்ன பிரச்சனை வந்தாலும் குடும்பம் தான் முக்கியம். நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும்.. என்ன பணம் சம்பாதித்தாலும்.. என்ன பிரச்சனை வந்தாலும்.. குடும்பம் மிக மிக முக்கியம் என்பதை உணர்த்துவதற்காக தான்.

இப்படி இருக்கும் பொழுது கேவலம் சின்ன சின்ன பிரச்சனைக்காக விவாகரத்து என்று தங்களுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றுவது எவ்வளவு பெரிய அபத்தம்.

ஒரு 70 வயதான ஒரு முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டார்.. ஏன் உலகத்திற்கே சூப்பர் ஸ்டாராக இருந்து விட்டு போகட்டும். ஆனால், தன்னுடைய மகளுக்கு அவர் ஒரு தந்தை.. தன்னுடைய பேரக்குழந்தைகளுக்கு அவர் தாத்தா.. தன்னுடைய மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே.. தன்னுடைய பேரக் குழந்தைகள் இப்படி நிற்கதியாக நிற்கிறார்களே..? என்ற வேதனையை அந்த மனிதனுக்கு இருக்குமா..? இருக்காதா..?

அவரிடம் பணம் இருக்கட்டும்.. செல்வம் இருக்கட்டும்.. எது வேணாலும் இருக்கட்டும்.. ஆனால் மகிழ்ச்சி இருக்கிறதா..? அப்படி இருவரும் பிரிந்து எதை சாதிக்க போகிறீர்கள்..? இதைத்தான் நான் இன்று பேச வந்தேன்.

ஒரு வேளையாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் மீண்டும் இணைகிறார்கள். தனுஷ் புதிதாக கட்டியிருக்கக்கூடிய வீட்டில் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா அவருடைய குழந்தைகள் அனைவரும் குடியேரப் போகிறார்கள் என்ற தகவல்கள் வருகின்றன.

அது நல்லபடியாக அப்படியே நடக்கட்டும். அப்படி நடந்தால் நிறைய தம்பதியினர் தங்களுடைய விவாகரத்து முடிவை மாற்றிக் கொள்வதற்கு ஒரு உந்துதலாக அமைந்தாலும் அது நல்ல விஷயம் தான் என பதிவு செய்திருக்கிறார் செய்யார் பாலு.

இவருடைய இந்த வீடியோவுக்கு தற்போது இணைய பக்கங்களில் லைக்கள் குவிந்து வருகின்றன.

Summary in English : In a recent discourse, Cheyyar Balu articulated her perspective on the decisions surrounding marriage and divorce among celebrities, emphasizing the profound impact these choices can have on their fans. She posited that celebrities, as public figures, often serve as role models for many individuals in society. Consequently, their marital decisions are not merely personal but resonate deeply with their followers.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version