நடிகையால் மரண விளிம்பில் விஷால்.. அந்த பழக்கத்தால் தோற்றிய நோய்.. பிரபலம் கூறிய பகீர் தகவல்..!

பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் நடிகர் விஷாலின் மோசமான உடல்நிலை குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

நடிகர் விஷால் தன்னுடைய நண்பர்களின் தவறான வழிகாட்டுதலின் பேரில் சில போதை பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டார். இதனால் ஏற்பட்ட நரம்பு தளர்ச்சி தான் தற்போது அவருக்கு எந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறது.

மட்டுமில்லாமல் அவன் இவன் படத்தில் நடிக்கும் போது அவருக்கு மாறு கண் வேண்டும் என்பதால் கண்ணில் சிறிதாக மாற்றம் செய்திருந்தார்கள். மருத்துவ முறையில் செய்யப்பட்டிருந்த இந்த மாற்றம் படப்பிடிப்பு முடிந்ததும் சரி செய்யப்பட்டது.

ஆனால், இதனால் ஏற்பட்ட பக்க விளைவின் காரணமாக நடிகர் விஷாலுக்கு அவருடைய கண்ணில் ரத்த ஓட்டம் அதிகப்படியாகிவிட்டது. இதன் காரணமாக அவருக்கு கடுமையான தலைவலி. நாள் முழுக்க தலைவலி இருக்கும் போது அதற்கான மாத்திரையை உட்கொண்டு கொண்டிருக்க முடியுமா..? முடியாது..

அதற்கு பதிலாக நடிகர் விஷால் தேர்வு செய்த வலி நிவாரணி.. மது. ஒரு கட்டத்தில் மதுவை தாண்டி போதை பொருட்களுக்கு அடிமையாகி விட்டார் விஷால். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் உள்ள பல நடிகைகள் நடிகர்கள் இந்த போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.

தினமும் லட்சக்கணக்கில் செலவு.. கோடிக்கணக்கில் சம்பளம்.. இப்படி பணம் வரும் வழியே தெரியாமல் அவர்களுக்கு பணம் வந்து கொண்டிருக்கிறது. அதனால் எங்கே செலவு செய்வது என தெரியாமல் தங்களை முழுமையாக கொண்டாட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

அந்த கொண்டாட்டத்தில் எத்தனை நாட்களுக்கு தான் மதுவை சுவைப்பது என புதிது புதிதான போதை பொருட்களுக்கு நகருகிறார்கள் பிரபலங்கள். விஷாலுக்கு 44 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம் அவர் இப்படி சுகபோகமாக வாழ்ந்து பழகி விட்டார்.

திருமணம் செய்து கொண்டால் வீட்டிற்கு நேரத்திற்கு வர வேண்டும்.. வீட்டு சாப்பாட்டை தான் சாப்பிட வேண்டும்.. குழந்தைகள்.. குடும்பம்.. மனைவி வீட்டார்.. தற்போது இருப்பது போல சுதந்திரப் பறவையாக இருக்க முடியாது.

இவர்கள் வீட்டில் இருப்பதே பெரிய விஷயம். எப்போது பார்த்தாலும் ரிசார்ட்.. ஸ்டார் ஹோட்டல்கள்.. விருந்து.. இது போலத்தான் இவர்களுடைய வாழ்க்கை முறையே இருக்கிறது.

இப்படியான வாழ்க்கை முறையும் நடிகர் விஷாலின் இப்படியான நிலைக்கு கொண்டு வந்து விட்டது. அவருடைய தந்தை ஜிகே ரெட்டி தற்போது 80 வயது ஆகிறது. அவருக்கு இப்போதும் இளைஞர் போல் காட்சி அளிக்கிறார்.

ஆனால் அவருடைய மகன் விஷால் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று பாருங்கள். அதனால் கொண்டாட்டத்திற்காக போதை பழக்கத்தை கையில் எடுக்காதீர்கள் என்று கூறியது மட்டுமில்லாமல் நடிகர் விஷால் குறித்து தன்னுடைய பார்வையையும் பதிவு செய்திருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

Summary in English : In a recent buzz, senior journalist Tamizha Tamizha Pandian opened up about the concerning health condition of actor Vishal. Fans have been speculating about his well-being for a while now, and it seems like Tamizha has some insider info that might shed light on the situation.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version