பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தன்னுடைய ஆண் நண்பருடன் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமான தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திவ்யதர்ஷினி.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளனியாக பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை நடிகையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பொழுதுபோக்குக்காக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு அதுவே அவருக்கு நிரந்தரமான வேலையாகவும் மாறிவிட்டது அதுவே அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்தது.
என்னுடைய கலகல பேச்சினால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சுவாரஸ்யம் கூட்டும் திவ்யதர்ஷினியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அந்த அளவுக்கு சுவாரசியம் கிடையாது.
தன்னுடைய நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினிக்கு அந்த திருமண வாழ்க்கை அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்த திவ்யதர்ஷினி அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். அவ்வப்போது இவருடைய இரண்டாவது திருமணம் குறித்து தகவல்கள் வெளியாவது வாடிக்கை.
தற்போது திவ்ய திவ்யதர்ஷினியே அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விதமாக தன்னுடைய காதலனை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.