50 வயசுலயும் இப்படியா..? ப்பா.. இளம் நடிகைகளை மிஞ்சும் நடிகை தீபா வெங்கட்..!

நடிகை தீபா வெங்கட் தமிழ் நடிகையாகவும், வானொலி தொகுப்பாளினியாகவும், பின்னணி குரல் கொடுக்கும் ஆர்டிஸ்ட் ஆகவும் விளங்கியிருக்கிறார். இவர் சித்தி, அண்ணாமலை, சாரதா, கோலங்கள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகை தீபா வெங்கட்டை பொறுத்த வரை மும்பை மகாராஷ்டிரத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே சென்னைக்கு குடிப்பெயர்ந்த இவர் பாசமலர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக 1994 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

50 வயசுலயும் இப்படியா..? ப்பா..

இந்த திரைப்படத்தை அடுத்து 1998 ஆம் ஆண்டு தினம் தோறும் என்ற படத்தில் 2001 இல் மாதவன், சிம்ரன், சினேகா நடித்த பார்த்தாலே பரவசம் படத்திலும் விக்ரம், லைலா நடித்த தில் திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் அதே ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் பிரபுதேவா கார்த்திக் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த உள்ளம் கொள்ளை போகுதே என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பேமஸானார்.

2002-ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த பாபா திரைப்படத்திலும் 2003-இல் ராமச்சந்திரா மற்றும் 2009-இல் கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களை செய்து அசத்தினார்.

பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்க கூடிய இவர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் படத்தில் மிக முக்கியமான கேரக்டர் ரோலை செய்திருக்கிறார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பயணம், ஜெயா டிவியில் ஒளிபரப்பான அக்னி பிரவேசம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

தற்போது 50 வயதை கடந்து விட்ட நிலையில் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். இதில் குறிப்பாக சினேகா, சிம்ரன், நயன்தாரா, சங்கீதா, தன்ஷிகா அனுஷ்கா செட்டி, ஜோதிகா காஜல் அகர்வால் போன்ற நடிகைகளுக்கு இவர் பின்னணி குரல் கொடுத்து அசத்தியவர்.

இளம் நடிகைகளை மிஞ்சும் நடிகை தீபா வெங்கட்..

மேலும் 50 வயதை கடந்துவிட்ட நிலையில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கக்கூடிய வகையில் அழகில் மிஞ்சி இருக்கும் நடிகை தீபா வெங்கட் செய்யும் ஒர்க் அவுட்டை பார்த்து அனைவரும் அசந்து போய் இருக்கிறார்கள்.

இதை அடுத்து 50 வயதிலும் இப்படியா என்று ஆச்சரியத்தோடு ரசிகர்கள் பார்க்கக்கூடிய வகையில் புடவையில் வெயிட் லிப்டிங் செய்யும் வீடியோவானது இணையம் எங்கும் வேகமாக பரவி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.

மேலும் ஹலோ எஃப்எம் வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருக்கக்கூடிய இவர் எந்த பண்பலையில் மூன்றாம் பார்வை என்ற நிகழ்ச்சியை வழங்கியது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக்கி உள்ளது.

அதோடு 2011 ஆம் ஆண்டு மயக்கம் என்ற திரைப்படத்திற்கு ரிச்சா கங்கோபாத்யாய் என்பவருக்கு குரல் கொடுத்ததற்காக நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த குரல் நடிகைக்கான விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் அந்த வெயிட் லிப்டிங் வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்து மகிழலாம்.

https://www.instagram.com/p/C-_xcejyS3p/?hl=en

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version