இந்த மாதிரி இறப்பு யாருக்கு வரக்கூடாது.. டெல்லி கணேஷ் மகன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமாகி இருக்கிறார். இவருடைய இந்த மறைவு செய்தி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.

சினிமா சீரியல் என தன்னுடைய நடிப்பு திறமையால் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் பெற்று இருக்கிறார் டெல்லி கணேஷ்.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை தத்ரூபமாக நடிக்கக்கூடிய ஒரு நடிகர். தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.. ஹிந்தியில் ஒரு வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.

இந்த வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நேற்று வம்பர் 9ஆம் தேதி இரவு 11 மணி வாக்கில் உயிரிழந்திருக்கிறார்.

இது குறித்து அவருடைய மகன் கொடுத்த பேட்டியில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.

அவர் கூறியதாவது, அப்பாவிற்கு மோசமான உடல்நல பாதிப்பு எதுவுமே இல்லை. அவருடைய வயது 80 ஆகிறது. அவ்வப்போது சிறுசிறு உடல்நல பிரச்சினைகள் வரும் அதற்கான மருத்துவ முறைகளை சரியாக பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இவர் திடீரென இறந்து விடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வேலை இவ்வாறு ஏதேனும் உடலுக்கு முடியாமல் சீரியஸா இருந்திருந்தால் காப்பாற்ற முயற்சி செய்திருப்போம். ஆனால் எங்களால் நம்பவே முடியாத அளவுக்கு இவருடைய மரணம் அமைந்திருக்கிறது.

நேற்று இரவு எங்களிடம் நன்றாக பேசிவிட்டு தான் தூங்க சென்றார். அப்போது ஒரு மாத்திரை கொடுக்க வேண்டும் என்று அவரை எழுப்ப முயற்சி செய்தோம். அப்போது அசைவற்று இருந்தார்.

உடனே மருத்துவரை அணுகினோம். மருத்துவர் வந்து பார்த்துவிட்டு அப்பா இறந்து விட்டார் என்று கூறினார். இப்படியொரு இறப்பு யாருக்குமே வரக்கூடாது. எங்களுக்கு என்ன செய்வது..? என்று தெரியவில்லை.

இந்த துயரத்தில் இருந்து எப்படி நாங்கள் மீள போகிறோம் என்று தெரியவில்லை. அப்பாவின் உடல்நிலை குறித்து முன்னரே எங்களிடம் தெளிவாக கூறியிருந்தால் நாங்கள் அதற்க்கேற்றார் போல் இருந்திருப்போம்.

ஆனால், அப்பாவின் உடல்நலையில் பெரிய பிரச்சனை எதுவுமே இருந்ததாக தெரியவில்லை. இவருடைய மறைவு எதிர்பார்க்காத ஒன்று. நாளை காலை அவருடைய இறுதிச்சடங்கு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.

எங்களுடைய உறவினர்கள் எல்லாம் வர வேண்டி இருக்கிறது. நடிகர் சங்கத்தினரும் வர வேண்டி இருக்கிறது. அதன் பிறகு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என பேசி இருக்கிறார் டெல்லி கணேஷின் மகன்.

Summary in English : The recent passing of actor Delhi Ganesh’s son has left a profound impact on the film industry and his fans alike. His unexpected death is a stark reminder of how fragile life can be, catching us off guard and leaving a void that feels insurmountable. As we grapple with this heartbreaking news, it’s essential to acknowledge the deep sorrow that accompanies such loss.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version