மீண்டும் ஒன்றினையும் தனுஷ் ஐஸ்வர்யா..! இது தான் ரீசன்..! பிரபலம் சொன்ன குட் நியூஸ்..!

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் சினிமா இயக்குனருமான ஐஸ்வர்யாவும் முன்னணி நடிகர் தனுஷும் தங்களுடைய விவாகரத்து முடிவை திரும்ப பெற இருக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ரஜினிக்காகவும் தங்களுடைய மகன்களுக்காகவும் தங்களுடைய விவாகரத்து முடிவில் இருந்து இருவரும் பின் வாங்கி இருக்கிறார்கள் என்ற தகவல் தகவலை பிரபலம் வருவார் வெளியிட்டு இருக்கிறார்.

எனினும் தனுஷ் தரப்பில் இருந்தோ ஐஸ்வர்யா தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர் அறிவிப்பும் வரவில்லை. ஆனால், அவர்களுடைய சமீபத்திய செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் இதற்கான சிக்னலை கொடுக்கிறது.

இந்த சூழலில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர்கள் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, தனுஷும் ஐஸ்வர்யா ராய் தங்களுடைய வாழ்க்கையில் தனித்தனி பாதையில் பயணிக்க போகிறோம் என சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்கள்.

அப்போது ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சி அடைந்தது. காரணம், நடிகர் ரஜினியின் இளைய மகளும் விவாகரத்து பெற்றவர். தற்போது இவருடைய மூத்த மகளும் விவாகரத்து என்று வந்திருக்கிறார் என்று பலரும் வேதனைப்பட்டார்கள்.

குறிப்பாக ரஜினி ரசிகர்கள் இதனால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார்கள். திருமணமாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார்கள். இந்நிலையில் தற்போது விவாகரத்து அறிவித்திருப்பது என்ன காரணம்..? என்று பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள்.

ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போன போது உடனே ஐஸ்வர்யாவை அழைத்த ரஜினிகாந்த் மனைவி லதா நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என அப்பா கோரிக்கை வைக்கிறார் என கூறியிருக்கிறார்.

அதன் பிறகு இருவரும் சேர்வதற்கு முடிந்து முடிவு செய்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. மூன்று முறை விவாகரத்து மனு விசாரணைக்கு வந்தும் இரண்டு பேருமே அந்த நேரத்தில் நேரில் ஆஜராகவில்லை.

மட்டுமில்லாமல் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை ரஜினி வீட்டில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைந்து கொண்டாடினார். இரண்டு பேரும் அப்போது மனம் விட்டு பேசியதாக கூறுகிறார்கள்.

தன்னுடைய youtube சேனலில் பேசுகையில், பிரபலங்களின் விவாகரத்தை நாம் ஏன் இவ்வளவு தூக்கி பேசுகிறோம் என்று பலரும் நம்மை விமர்சனம் செய்கிறார்கள்.

அதற்கெல்லாம் ஒரே காரணம்தான். அவர்களை கோடிக்கணக்கான பேர் பின் தொடர்கிறார்கள். அவர்களை பொறுத்தவரையில் தங்களுடைய தலைவர் இப்படி செய்து விட்டாரே.. நாமும் செய்தால் என்ன..? என்ற ஒரு எதிர்மறையான எண்ணம் தோன்றலாம்.

அதனால்தான் அவர்களுடைய பேசுகிறோம். யாரோ ஒருவர் விவாகரத்து செய்தார்… யாரோ ஒருவர் திருமணம் செய்தார்.. என்றால் நாம் யாரையும் எதையும் கேட்க போவதில்லை.

ஆனால், லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள ஒரு பிரபலம் இப்படியான முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவை பற்றி விவாத பொருளாக மாற்ற வேண்டியது நம்முடைய கட்டாயம். பத்திரிகையாளர்களுடைய கடமையாக நான் இதனை பார்க்கிறேன் என பேசியிருக்கிறார்.

மேலும் புதிதாக தனுஷ் வாங்கியுள்ள வீட்டில் ஐஸ்வர்யா மற்றும் அவருடைய குழந்தைகள் ஆகியோர் குடும்பமாக குடியேற இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அதே நேரம் விவாகரத்து முடிவில் இருக்கும் தம்பதிகள் கூட மீண்டும் ஒருமுறை தங்களுடைய வாழ்க்கையை பற்றி யோசித்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பமாக இது அமையும்.

கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அதனை கடந்து எப்படி வாழ்க்கை நகர்த்துகிறோம் என்பது தான் வாழ்க்கையில் சுவாரஸியமே. அந்த சுவாரசியமே வேண்டாம்.. நாங்கள் பிரிந்து விடுகிறோம்.. வெறுமனே உயிர் வாழ்கிறோம் என்றால்.. அது எப்படி வாழ்க்கையாக முடியும்..? என்று விவரிக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

Summary in English : Recent developments have surfaced regarding the highly publicized relationship between Indian actor Dhanush and filmmaker Aishwarya Rajinikanth. Following a period of speculation and media scrutiny surrounding their divorce, credible sources indicate that the couple has decided to withdraw their decision to separate.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version