நடிகர் தனுஷ் இரண்டாம் திருமணம்..? மணப்பெண் யாருன்னு தெரியுமா..?

Recently, the entertainment industry has been abuzz with rumors surrounding actor Dhanush and his potential marriage to a divorced doctor.

நடிகர் தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா உடனான 18 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொண்டார்.

தங்களுடைய பிரிவை முறைப்படி விவாகரத்து பெறுவதற்கு முன்பே இருவரும் அறிவித்தனர். கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

கடந்த நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருக்கும் விவாகரத்து வழங்கிய தீர்ப்பளித்தது நீதிமன்றம். சமீபத்தில், தீபாவளி பண்டிகையை நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் கொண்டாடினார் நடிகர் தனுஷ்.

மட்டுமில்லாமல் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் என்ற திரைப்படத்தை இருவரும் ஜோடியாக வந்து பார்த்தனர். இதை எல்லாம் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இருவரும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக இருவரும் விவாகரத்து பெற்று நிரந்தரமாக பிரிந்து இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க நடிகர் தனுஷின் இரண்டாம் திருமணம் குறித்த தகவல்கள் இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே நடிகர் தனுஷின் அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார். நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் விவாகரத்து செய்த பின் சினிமாத்துறைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் தனுஷுக்கும் சினிமா துறையில் சம்பந்தமில்லாத மருத்துவர் ஒருவரை இரண்டாவதாக மணம் முடிக்க அவருடைய பெற்றோர்கள் முயற்சி செய்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி வருகின்றது.

மட்டுமல்லாமல் அந்த மருத்துவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்ற தகவலும் கிசுகிசுக்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் என்று கூறுகிறார்கள்.

தற்போது கையில் அறை டஜன் படங்களை வைத்திருக்கும் நடிகர் தனுஷ் அடுத்த திருமணம் குறித்து எந்த யோசனையும் செய்யாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதே சமயம், நடிகர் தனுசுக்கு விரைவில் இரண்டாம் திருமணம் செய்து வைக்க முயற்சியில் அவருடைய பெற்றோர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

இதன் மூலம் நடிகர் தனுஷின் விவாகரத்து அவருடைய தனிப்பட்ட பிரச்சினையை சார்ந்து மட்டுமே அமையவில்லை என்பதை யூகிக்க முடிகிறது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் குடும்பத்திற்கும் நடிகர் தனுஷ் அவர்களின் குடும்பத்திற்கும் ஆரம்பம் முதலே சிக்கல்கள் இருந்தன.

தனுஷ் அவர்களின் தந்தை கஸ்தூரிராஜா ஒரு பண பிரச்சனையில் சிக்கிய போது நடிகர் ரஜினிகாந்த் இடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை அவர் பணம் வாங்கி இருக்கிறார் அவர் கொடுக்கவில்லை என்றால் அது அவருடைய பிரச்சனை இது எப்படி என்னுடைய பிரச்சனையாகும் என்று பதிலளித்திருந்தார்.

என்ன இருந்தாலும் ஒரு சம்பந்தியை பற்றி யாரென்றே தெரியாதவர் போல ரஜினிகாந்த் பேசுவது சரியா..? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனுஷ் அவர்களுடைய குடும்பத்தினர் தனுஷுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஏற்கனவே விவாகரத்தான மருத்துவர் ஒருவரை தேர்வு செய்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் வைரலாகி வருகின்றது. தொடர்ந்து இது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Summary in English : Recent buzz surrounding actor Dhanush has ignited speculation about his personal life, particularly regarding a potential marriage with a divorced doctor. This news has captured the attention of fans and media alike, as Dhanush is known for his impressive filmography and charismatic presence in the industry. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version