தனுஷை இந்த விஷயத்தில் நம்பக்கூடாது.. தவிக்கும் இளையராஜா.. இப்படி பண்ணீட்டிங்களேப்பா!..

தொடர்ந்து தமிழில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

ஏனெனில் மற்ற நடிகர்களைப் போல பெரும் சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்காமல் சில சமயங்களில் வித்தியாசமான திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ்.

இந்த விஷயத்தில் நம்பக்கூடாது

உதாரணத்திற்கு திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களை கூறலாம். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சண்டை காட்சிகளே இருக்காது ஆனால் அந்த திரைப்படத்தில் தனுஷ் நடித்திருப்பதை பார்க்க முடியும். தனுஷ் மாதிரியான ஆக்ஷன் நடிகர்கள் பெரும்பாலும் இந்த மாதிரியான கதைக்களங்களை தேர்ந்து எடுப்பது கிடையாது.

 

இந்த நிலையில் தற்சமயம் தனுஷிற்கு படங்களை இயக்குவது மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கவும் தொடங்கி இருக்கிறார் தனுஷ். இதற்கு நடுவே தனுஷ் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருந்தார்.

தவிக்கும் இளையராஜா

படத்திற்கான முதல் கட்ட போஸ்டர்கள் கூட வெளியானது. ஆனால் அதற்குப் பிறகு படத்தை குறித்த எந்த ஒரு அப்டேட்டுமே வரவில்லை இந்த நிலையில் அந்த படம் தற்சமயம் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்சமயம் அவரது இயக்கத்தில் அவரே நடித்து இட்லி கடை என்கிற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இதன் காரணமாக தனுஷ் இளையராஜா திரைப்படத்தை தள்ளி போட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்சமயம் இளையராஜாவும் விரக்தியில் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. மேலும் தனுஷிற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை இந்த திரைப்படத்தில் இளையராஜா நடிக்க வைப்பதற்கு கூட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே சமயம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றையும் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்கி அதில் தானே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பது தனுஷின் ஆசையாக இருந்து வருகிறது. இதை அவரே வெளிப்படையாக கூறி இருக்கிறார். எனவே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கண்டிப்பாக தனுஷ்தான் நடிப்பார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version