தனுஷ்க்கும் நடிகைகளுக்கும் இடையே உள்ள உறவு? உண்மையை கூறிய துஷாரா விஜயன்..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்புக்காக அதிகமாக போற்றப்படும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். பொதுவாக தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் தொடர்ந்து கமர்சியலான திரை கதைகளைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

ஏனெனில் அவர்களை பொறுத்தவரை புதுமையான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது ரிஸ்க் என்றுதான் கூற வேண்டும். ஒருவேளை அந்த கதைகள் நல்ல வரவேற்பு பெறவில்லை என்றால் அது அந்த நடிகர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

இடையே உள்ள உறவு

அதனால் புதிதாக சினிமாவிற்கு வரும் நடிகர்கள் கூட தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதை பார்க்க முடியும். ஆனால் இப்பொழுது தமிழ் சினிமாவில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ரசிகர்கள் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்க துவங்கியிருக்கின்றனர்.

தொடர்ந்து தமிழில் வெளியாகும் நிறைய புதுவிதமான கதைகள் வரவேற்பை பெற துவங்கியிருக்கின்றன. ஆனால் ஆரம்பத்திலிருந்து நடிகர் தனுஷ் தொடர்ந்து இந்த மாதிரியான புது விதமான கதைகளை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சிறப்பான நடிகர்

நடிப்பு தொடர்பாக தனுஷ் குறித்து நல்ல விதமான பெயர்கள் இருந்தாலும் கூட அவருடைய சொந்த வாழ்க்கை குறித்து எப்பொழுதும் மோசமான சர்ச்சைகள்தான் சினிமாவில் இருந்திருக்கின்றன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்களுடன் தனுஷிற்கு தொடர்பு இருப்பதாக பேச்சுக்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபலங்களுக்கு நடுவே நடந்த நிறைய விவாகரத்துகளுக்கு காரணமானவர் தனுஷ்தான் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து நடிகை துஷாரா விஜயன் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.

உண்மையை கூறிய துஷாரா விஜயன்

நடிகை துஷாரா விஜயன் ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்க்கு தங்கையாக நடித்திருந்தார். அவர் பேட்டியில் பேசும்பொழுது தொடர்ந்து தனுஷ் குறித்து பொதுமக்கள் மத்தியில் நிறைய தவறான சர்ச்சைகள் நிலவி வருகின்றன. உண்மையில் தனுஷ் அந்த மாதிரியான ஆட்கள் கிடையாது அவர் மிகவும் நல்ல மனிதர். அவருடன் சேர்ந்து ஒரு படம் பண்ணி இருக்கிறேன் அவரை மாதிரி நல்லவரை நான் பார்த்தது கிடையாது என்று கூறியிருக்கிறார் துஷாரா விஜயன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version