கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனின் காதல் லூட்டி.. பிரேக் அப் காரணம் சொன்ன பிரபலம்..

விரைவில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்கும் என்ற செய்தி வெளிவந்திருக்கும் நேரத்தில் பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கீர்த்தி மற்றும் எஸ் கே இடையே இருந்த காதல் சமாச்சாரம் குறித்து பரபரப்பாக பேசிய விஷயம்.

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பின் ஹீரோயினியாக தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 2015 ஆம் ஆண்டு தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

முதல் படத்திலிருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு அடுத்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ரஜினி முருகன் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனின் காதல் லூட்டி..

இந்த படமும் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து தொடர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷின் கெமிஸ்ட்ரி பற்றி பலரும் பேசியதோடு அவர்கள் இணைந்து நடிக்கும் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். 

அந்த வகையில் இவர்கள் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ரெமோ படத்தில் இணைந்து நடித்தார்கள் அப்போது அவர்களுக்கு இடையே லேசாக காதல் கசமுசா ஓடியதாக பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார். 

இந்த விஷயமானது அண்மை பேட்டியில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் ஒரு பகீர் அதிர்ச்சியை ஏற்படுத்தி தந்துள்ளதாகவும் இந்த விஷயம் சிவகார்த்திகேயனின் குடும்பத்திற்கு தெரிய வர கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இது போன்ற சர்ச்சைகள் சிக்கினால் வருங்காலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் சுரேஷ் கீர்த்தியுடன் உண்டான அந்த லவ்வுக்கு எண்டு கார்டு போட்டுவிட்டார்.

பிரேக் அப் காரணம் சொன்ன பிரபலம்..

அத்தோடு இனி மேல் அவரோடு எந்த படத்திலும் இணைந்து நடிக்க கூடாது என்று முடிவு செய்ததை அடுத்த தான் ரெமோ படத்திற்கு பிறகு இருவரும் எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை என்ற குண்டை சபிதா ஜோசப் தூக்கி போட்டார். 

இந்தத் தகவலானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 

அது மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷின் விவகாரத்தில் பக்குவமாக நடந்து கொண்ட எஸ் கே இசையமைப்பாளர் இமானின் மனைவி விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்ற கோணத்தில் அனைவரும் பேசி வருகிறார்கள். 

Summary in English: Did Sivakarthikeyan and Keerthy Suresh fall in love? This question has been buzzing around since the duo starred together in the hit movie “Remo.” Fans couldn’t help but notice their undeniable chemistry on-screen, sparking rumors that they might be more than just co-stars. Social media was flooded with speculations, fan edits, and even some hopeful wishes from die-hard fans.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version