இதை பண்ணுங்க.. விஜய் மட்டுமல்ல யாராலும் உங்களை தோற்கடிக்க முடியாது.. திமுகவுக்கு அமீர் எச்சரிக்கை..!

In a recent statement that’s got everyone talking, Director Ameer has called out the DMK party to treat superstar Vijay with the respect he deserves. He emphasized that using improper statements or tactics won’t do anyone any favors.

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களின் முக்கியமான ஒருவராக இருக்கிறார். இவரை சுற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கொண்டிருப்பவர் அமீர்.

இவருடைய அரசியல் சார்பாக கருத்துக்கள் இவருடைய மதம் சார்ந்த கருத்துக்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அதன் மீது பலருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் ஒரு சினிமா இயக்குனராக இயக்குனர் அமீர் மீது ஒவ்வொரு சினிமா ரசிகருக்கும் நல்ல மதிப்பு இருக்கிறது.

இவருடைய முதல் படமான மௌனம் பேசியதே படம் கடந்த வாரத்தில் 22 ஆவது ஆண்டினை கொண்டாடியது. இன்றைக்கும் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் நடிகையாக இருக்கும் நடிகை யார் என்று கேட்டால் நடிகை திரிஷா என்று கூறலாம். திரிஷாவை தன்னுடைய திரைப்படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் அமீர் தான்.

கடந்த வாரம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி 22 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து இந்த படத்தின் ரசிகர்கள் பலரும் கொண்டாடினார்கள். இந்த படம் சிறப்பாக இருந்தால் அது யாருடைய படமாக இருந்தாலும் அதனை பாராட்டும் பண்பும் கொண்டவர் அமீர்.

எந்த படம் சிறப்பாக இருந்தாலும் கடந்த சிறந்த கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வரும் இவர் அரசியல் மற்றும் பொது நிகழ்வுகள் குறித்தும் மதம் சார்ந்த நிகழ்வுகள் குறித்தும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவர் மீது மாற்று கருத்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. இது ஒரு பக்கம் இருக்க விஜய் மற்றும் திமுக குறித்து தெரிவித்துள்ள கருத்து கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் பயணிக்க திட்டமிட்டு இருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினாலும் அவருடைய அரசியலில் என்னென்ன மாற்றங்கள் செய்யப் போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் எதிரியாக திமுக கட்சியை முன் நிறுத்துகிறார். இதனை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய். மட்டுமில்லாமல் அனைத்து நிகழ்வுகளிலும் திமுகவையும் திமுக அரசையும் கண்டிக்கும் விதமாகவே நடிகர் விஜயின் நகர்வுகள் இருக்கின்றன.

விஜயின் பேச்சுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் திமுகவும் பதிலடி கொடுத்திருக்கின்றனர். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விஜயின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், இயக்குனர் அமீர் தன்னுடைய அரசியல் அனுபவம் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ள தங்களுடைய பார்வை ஆகியவற்றை நிறுவும் விதமாக ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இவருடைய கருத்து பலரிடமும் வரவேற்பு பெற்று இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அவர் கூறியதாவது, திமுக போன்ற ஒரு மிகப்பெரிய கட்சி மூன்றாம் தரமான பேச்சாளர்களை வைத்து கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.

அவர்கள் பேசக்கூடிய கொச்சையான பேச்சுக்கள் திமுகவின் மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்கின்றன. கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். ஒருவரின் தொழிலை இழிவு படுத்தி பேசுவதாலோ..? ஆபாசமாக மேடைகளில் பேசுவதாலோ..? அவரை வீழ்த்தி விட முடியாது.

நடிகர் விஜய்யை தரம் தாழ்ந்து பேசுவதால் திமுகவின் வாக்குகள் சட சடவென சரியும். இது திமுகவுக்கு மிகப்பெரிய பலவீனமாக எதிர்காலத்தில் அமையும் என பேசி இருக்கிறார் அமீர்.

இவருடைய அந்த பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கின்றது. இதனை திமுகவினர் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்..? என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

Summary in English : In a recent turn of events, Director Ameer has stepped up to voice his concerns about how the DMK party is handling the situation with actor Vijay. He’s made it clear that using improper statements or tactics isn’t the way to go. Ameer believes that respecting Vijay and addressing any issues in a more constructive manner is crucial.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version