மீண்டும் இயக்குனராகும் நடிப்பு அசுரன் எஸ். ஜே சூர்யா.. ஓ!! அந்தப் படத்தின் இரண்டாம் பகுதியா?

இயக்குனரும் நடிகருமான எஸ். ஜே சூர்யா தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வந்தாலும் வருகின்ற ஜனவரி மாதம் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக தற்போது இருப்பவர் எஸ்.ஜே சூர்யா. இவரை ரசிகர்கள் அனைவரும் நடிப்பு அசுரன் என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். 

இவர் நடிப்பதற்கு வருவதற்கு முன்பு இயக்குனராக பல படங்களை இயக்கி இருக்கிறார். அதில் இரண்டு படங்களை நாம் குறிப்பிட்டு சொல்லலாம். அதில் வாலி மற்றும் குஷி படத்தை எவராலும் எளிதில் மறந்து விட முடியாது. 

மீண்டும் இயக்குனராகும் நடிப்பு அசுரன் எஸ். ஜே சூர்யா..

இதனை அடுத்து மற்ற இயக்குனர்களைப் போலவே இவரும் ஹீரோவாக சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை இவருக்கு பெற்று தரவில்லை. 

இதனைத் தொடர்ந்து இவர் வில்லன் அவதாரம் எடுத்து தனக்குள் மறைந்திருந்த நடிப்பு அசுரனை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இதனை அடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததை அடுத்து தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்கின்ற அளவு நல்ல பேமஸை பெற்றிருக்கிறார். 

மேலும் அண்மையில் வெளி வந்த இந்தியன் 2 படத்திலும் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்று சொல்லலாம். இதை அடுத்து கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் இந்த படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளிவரவுள்ளது. 

ஓ!! அந்தப் படத்தின் இரண்டாம் பகுதியா?

இந்நிலையில் பேட்டி ஒன்றில் எஸ்.ஜே சூர்யாவிடம் ரசிகர்கள் அனைவரும் நீங்கள் அடுத்ததாக எப்போதும் படத்தை இயக்குவீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு கேம் சேஞ்சர் ரிலீசுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

இதைத்தொடர்ந்து அது நியூ படத்தின் இரண்டாவது பாகமா? என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் முன் வைக்க அதற்கு எஸ்.ஜே சூர்யா நியூ படத்தின் இரண்டாம் பாகத்தை போலவே தான் கில்லர் திரைப்படமும் இருக்கும் என்று பதில் அளித்தார். 

இதைத் தொடர்ந்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. 

Summary in English: Exciting news in the film world! Director and actor SJ Surya is gearing up to direct a brand-new film set to hit the screens this coming January. Fans of his work know that he always brings something unique and engaging to the table, whether he’s behind the camera or in front of it. With his knack for storytelling and a flair for captivating performances, there’s a lot of buzz surrounding what he has in store for us this time.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version