நடிகர் அஜித்தை அறைந்தது குறித்த கேள்விக்கு இயக்குனர் பாலாவின் அதிரடி பதில்..!

In a recent interview, director Bala addressed the swirling rumors about an alleged incident involving actor Ajithkumar.

இயக்குனர் பாலா குறித்த பெரிதாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இவருடைய ஒரு படத்தில் நடித்த பத்து படத்தில் நடித்து முடித்ததற்கான அனுபவம் கிடைக்கும் என்பது சினிமா துறையினரின் பொதுவான கருத்து.

இயக்குனர் பாலாவின் படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் அஜித்குமார் என்பது பலருக்கும் தெரியும். இந்த படத்தில் பாலாவுக்கும் நடிகர் அஜித்துக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த திரைப்படம் டிராப் செய்யப்பட்டது.

அதன் பிறகு நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம் உருவாகிய வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலாவும் அஜித் குமாரும் ஒரு ஹோட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்றும் அந்த பேச்சுவார்த்தையின் போது இயக்குனர் பாலா நடிகர் அஜித்தை அடித்து விட்டார் என்றும் தகவல்கள் வைரலானது.

கடந்த பல வருடங்களாக இந்த தகவல் இணைய பக்கங்களிலும் பத்திரிகைகளும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதனுடைய உண்மை என்ன என்று இயக்குனர் பாலாவிடமே சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

நீங்கள் அஜித்தை அடைந்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மையா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பாலா, நானும் அஜித்தும் ஒரே அறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம் என்பது உண்மை. அப்போது எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது என்பது உண்மை.

ஆனால், எங்களுக்குள் சண்டை வந்தது. நான் அவரை அடித்து விட்டேன் என்று வரும் தகவல்களெல்லாம் பத்திரிகைகள் கற்பனையாக உருவாக்கிக் கொண்டது என கூறினார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய தொகுப்பாளினி அப்படி என்றால் அங்கு என்னதான் நடந்தது..? என்ற கேள்வியை முன் வைத்தார்.

இதற்கு பதில் அளித்த பாலா, இந்த கேள்வியை நீங்கள் அல்டிமேட்டை தான் கேட்க வேண்டும். இதற்கு நான் பதில் சொல்ல முடியாது என்று அடுத்த கேள்விக்கு நகர்ந்து விட்டார். அவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Summary in English : In a recent interview, director Bala addressed the swirling rumors about an alleged altercation with actor Ajithkumar, and let me tell you, he didn’t hold back! He firmly stated that these claims are nothing but baseless gossip. It’s easy for stories to get twisted in the entertainment industry, and it seems like this is one of those instances where speculation has taken a wild turn.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version