கதை இல்லாமல் கஷ்டப்பட்ட இயக்குனர் ஷங்கர்.. கதை கொடுத்து உதவிய இளம் இயக்குனர்.. எந்த படம் தெரியுமா?

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் என்கிற திரைப்படத்தை இயக்கியது மூலமாக இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர்.

அவரது முதல் படத்தில் துவங்கி ஷங்கர் இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்கள் அதிகபட்சம் அதிக பட்ஜெட் திரைப்படங்களாக தான் இருக்கும்.

ஒரு வேளை அந்த படம் குறைந்த பட்ஜெட்டில் உள்ள படமாக இருந்தாலும் கூட அதில் வேண்டுமென்று அதிக செலவுகளை செய்து அதிக பட்ஜெட் படமாக மாற்றிவிடுவார் இயக்குனர் ஷங்கர். உதாரணத்திற்கு நண்பன் திரைப்படத்தை கூறலாம்.

கதை இல்லாமல் கஷ்டப்பட்ட இயக்குனர் ஷங்கர்

நண்பன் திரைப்படத்தில் பெரிய பட்ஜெட் என்று எதுவுமே செலவுகள் இருக்காது. இருந்தாலும் கூட படத்தின் பாடல்களை மிக ஆடம்பரமாக செய்து படத்திற்கான பட்ஜெட்டை அதிகரித்திருப்பார் ஷங்கர். இப்படி இருக்கும் பொழுது ஷங்கரிடமே கதை இல்லாத சம்பவம் ஒன்று நடந்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

ஒருமுறை தெலுங்கு நடிகர் ஒருவர் என்னிடம் படம் இயக்கச் சொல்லிக் கூறினார். அவரை வைத்து இயக்குவதற்கு ஏற்ற மாதிரி கதை எதுவும் என்னிடம் இல்லை. மேலும் நான் அப்பொழுது இந்தியன் 2 திரைப்படத்திற்கு பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

உதவிய இளம் இயக்குனர்

அதே சமயம் வேள்பாரி படத்திற்கான கதைகளையும் எழுதி கொண்டிருந்தேன். இதற்கு நடுவே இவரை வைத்து படம் பண்ணுவதற்கு என்னிடம் கதை இல்லை. நான் வைத்திருந்த கதைகள் எல்லாமே மிகவும் அதிக பட்ஜெட் கொண்ட படங்களாக இருந்தன.

அந்த அளவிற்கு அந்த நடிகருக்கு தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் இல்லை இந்த நிலையில்தான் இது குறித்து நான் பேசிக் கொண்டிருந்த பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் ஒரு கதை இருக்கிறது இப்பொழுது என்னால் அதை படம் பண்ண முடியாது.

நீங்கள் வேண்டுமானால் படம் பண்ணிக்கோங்க சார் என்று கொடுத்தார் என்று ஷங்கர் கூறியிருக்கிறார். அது வேறு எந்த படமும் அல்ல, இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படம் கார்த்திக் சுப்புராஜின் கதை என்பதால் ரத்தம் தெரிக்கும் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version