“படுக்கையிலேயே அதை பண்ணுவேன்..” வெக்கமின்றி வெளிப்படையாக சொன்ன டிஸ்கோ சாந்தி..!

Actress Disco Shanthi recently opened up about her journey to overcome her drinking habit, and let me tell you, it’s both inspiring and relatable!

பிரபல நடிகை டிஸ்கோ சாந்தி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனக்கு இருந்த மோசமான பழக்கம் குறித்தும் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் வெட்கப்படாமல் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அவர் கூறியதாவது, நான் ஒரு காலத்தில் குடிக்கு அடிமையாக இருந்தேன். எப்போது பார்த்தாலும் மது அருந்தி கொண்டே இருப்பேன். மதுவை வைப்பதற்கு என எங்கள் வீட்டில் தனியாக ஒரு அறை இருந்தது.

குடிப்பேன்.. படுக்கையில் சென்று படுப்பேன்.. எழுந்திருப்பேன்.. மறுபடியும் குடிப்பேன்.. படுக்கையில் சென்று படுப்பேன்.. ஒரு கட்டத்தில் படுக்கையில் இருந்தபடியே குடிக்க ஆரம்பித்தேன்.

இப்படியாக மதுவுக்கு அடிமையான காரணத்தினால் நான்கு முறை உடல் நலம் பாதிக்கப்பட்டு இனிமேல் உயிர் பிழைக்கவே மாட்டேன் என்ற சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.

ஒருமுறை மருத்துவர்.. அவ்வளவுதான் ஒரு மாதம் அதற்கு மேல் இந்த உடம்பு தாங்காது என கூறினார். அப்போது கூட நான் பயப்படவில்லை. எதற்கும் என்னை மாற்றிக்கொள்ள நான் தயாராக இல்லை.

ஆனால், ஒரு கட்டத்தில் என்னுடைய குடிப்பழக்கத்தை நிறுத்தினேன். இதற்கு முக்கிய காரணம் என்னுடைய மகன்கள். ஒருவேளை அவர்கள் என்னை திட்டி இருந்தாலோ அதட்டி சொல்லி இருந்தாலோ.. போங்கடா.. நான் அப்படித்தான் இருப்பேன் என்று தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்திருப்பேன்.

ஒருமுறை என்னுடைய வீட்டின் ஹாலில் என்னை அமர வைத்து இருவரும் கண்களில் கண்ணீருடன் என்னிடம் ஒரு கேள்வி எழுப்பினார்கள். எங்களுக்கு ஆதரவாக இருப்பது நீங்கள் மட்டும்தான்.

நான்கு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டீர்கள்.. யாராவது வந்து உங்களுடைய உடல்நலம் எப்படி இருக்கிறது என்று விசாரித்தார்களா..? பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

உண்மைதான் நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை குறித்து விசாரிக்க ஒருவரும் வரவில்லை. அப்படி இருக்கும்பொழுது நீங்களும் இல்லை என்றால் எங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்..? என்னுடைய வாழ்க்கை என்னாவது..? எங்களுக்கென யாரு இருக்கிறார்கள்..? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அந்த கேள்விக்கு எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அடுத்த நாளே மதுப்பழக்கத்தை விட்டு விட்டேன். தற்போது வரை அதனை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். மது பழக்கத்தை கைவிட்ட சில நாட்களில் மிகவும் சோர்வாக இருந்தது. மனம் குழப்பமான நிலையில் இருந்தது.

ஆனால், அதை எல்லாம் கடந்து வந்த போது ஒரு புது மனுசியாக என்னை நான் உணர்ந்தேன் என பேசியிருக்கிறார் டிஸ்கோ சாந்தி. 

Summary in English : Disco Shanthi, the beloved actress known for her vibrant personality and unforgettable performances, recently opened up about her journey to overcoming a drinking habit. It’s not always easy to share such personal struggles, but she’s done it with grace and honesty.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version