Thats Bold..! மேடையிலேயே விளாசிய DSP.. ! மிரண்டு போன படக்குழு..!

In a surprising turn of events at a recent event, renowned music director Devi Sri Prasad (DSP) took to the stage to express his frustrations directly towards the producer of the highly anticipated film “Pushpa 2.”

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா படத்தில் தயாரிப்பாளரை மேடையிலேயே கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

புஷ்பா 2 படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சாய்ராம் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் புஷ்பா 2 படத்தில் நடித்த முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேடையில் பேச தொடங்கிய இவர் தன்னுடைய பேச்சை ஆரம்பித்ததும் படத்தின் தயாரிப்பாளர்களை கடுமையாக விமர்சிக்கும் விதமாக பேசியிருந்தார். அவர் கூறியதாவது, ரவி சார் நீங்கள் என்னை குறை கூறுகிறீர்கள்.

நான் பாடல்களை முறையான நேரத்திற்கு ஒப்படைக்கவில்லை. பின்னணி இசை சரியான நேரத்தில் செய்து கொடுக்கவில்லை என்று கூறுகிறீர்கள்.

என் மீது அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், எங்கே அன்பு இருக்கிறதோ.. அங்கே புகார்களும் இருக்கும்.

ஆனால் என் மீது உங்களுக்கு இருக்கும் அன்பை விட புகார்கள் அதிகம் இருப்பதாக நான் உணர்கிறேன். இப்போது கூட நான் தாமதமாக வந்தேன்.. எதுக்கு லேட்டா வந்த என்று கேட்கிறீர்கள்.. நான் என்ன செய்வது…?

நான் இங்கே 25 நிமிடங்களுக்கு முன்பே வந்து விட்டேன். ஆனால், என்னை உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை. உங்களுடைய கேமரா என்ட்ரி இந்த நேரத்தில் தான் செட் செய்யப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் தான் நீங்கள் உள்ளே வரவேண்டும் என கூறி 25 நிமிடம் என்னை வெளியேவே விட்டு வைத்து விட்டார்கள்.

இப்படியான சூழலில் நான் என்ன செய்ய முடியும்..? என பேசினார். இதன் மூலம் தேவி ஸ்ரீ பிரசாத் ஏதோ கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

தொடர்ந்து பேசிய அவர் இப்படியான விஷயங்களை மேடைக்கு பின் கண்டிப்பாக பேச முடியாது. இப்படி ஒரு ஸ்டேஜில் பேசும் பொழுது என்னுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கிறதோ.. இல்லையோ.. ஒரு கிக் கிடைக்கிறது.. நான் வெளிப்படையாக இருக்கிறேன்.. என பேசினார்.

அதனை தொடர்ந்து பதறிப்போன நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உங்களுடைய whatsapp சண்டைகளை எல்லாம் இங்கே பேசுகிறீர்கள் போல் தெரிகிறது. படத்தை பற்றி ஏதாவது… என ஆரம்பிக்கவே… சித்தம் தெளிந்தவராக இயல்பு நிலைக்கு திரும்பிய DSP தொடர்ந்து படம் குறித்து பேச தொடங்கினார்..

இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Summary in English : DSP candid remarks have sparked significant discussion among fans and industry insiders alike. DSP’s passionate outburst highlights not only his dedication to the project but also raises critical questions about collaboration and creative integrity in filmmaking.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version