படத்தை விடுங்க.. இது, உச்ச கட்ட கேவலம்.. நடிகர் ராம் சரணை கழுவி ஊத்தும் தெலுங்கு ரசிகர்கள்..! என்ன காரணம் தெரியுமா..?

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ராம் சரண், எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் செய்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

2025 ஆம் ஆண்டில் இப்படி மோசமான திரைக்கதையுடன் ஒரு படத்தை அதுவும் இயக்குனர் சங்கரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை, என்னதான் இது தெலுங்கு படம்.. என்றாலும்.. கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா,? திரைக்கதை நம்பும் படியாகவே இல்லை.

ஏதோ ஒரு கதையை வைத்துக்கொண்டு.. எப்படியோ ஒரு திரைக்கதையை எழுதி.. படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் அபத்தமாக இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கும்..? அங்கே அத்துமீறி ஒரு ஈ, காக்கா நுழைவது கூட சவாலான விஷயம். அந்த அளவுக்கு மத்திய மாநில அரசுகளின் கூட்டு கட்டுப்பாட்டில் அந்த வாக்கு எண்ணிக்கை மையங்கள் இருக்கும்.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் சங்கர் காட்டி உள்ள குரல் வித்தைகளை பார்க்கும்போது குமட்டுகிறது எப்போடா இந்த கிளைமாக்ஸ் முடியும் என்று ஆகிவிடுகிறது என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படம் முதல் நாளில் 186 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்ற ஒரு தகவலை பட குழு வெளியிட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இந்த திரைப்படம் முதல் நாளில் 52 கோடி மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில் எப்படி 186 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்று தகவலை வெளியிட்டார்கள்…? வெளிநாட்டு திரையரங்குகளின் வசூல் விபரங்களை உள்ளடக்கினால் கூட 83 கோடி தான் வருகிறது.

ஆனால் ஒரே அடியாக 100 கோடி ரூபாயை சேர்த்து 186 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என படக்குழு அறிவித்திருக்கிறது. இது நியாயமா..? என இணைய பக்கங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Fans of “Game Changer” are not holding back when it comes to slamming the recent fake box office report that’s been making the rounds. It seems like every week there’s a new headline claiming the show is breaking records, but many fans are calling out these reports as misleading.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version